Navigate / search

GET TO GETHER – 8/12/2017 Friday

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் வருகின்ற 08/12/2017 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் நமதூர் மக்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி நமது KNR Unity நண்பர்களால் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது, தொழுகைக்கு பின் மதிய உணவும் பின்பு விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமதூர் மக்கள் அனைவரையும் இதில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது இப்படிக்கு, நிர்வாகத்தினர் KNR Unity – UAE

கே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி – 2017

கே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி – 2017   ஹிஜ்ரி 1438 ஆண்டு ரமலான் பிறை 14 அன்று கே.என்.ஆர் யூனிட்டியின்  இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. நமதூர் மக்கள் திரளாக பங்கு பெற்று சிறப்பித்தனர் , நிகழ்ச்சியை கே.என்.ஆர் யூனிட்டியின் தலைவர் AGM பைரோஸ் கான் தொடங்கி வைக்க அதனை தொடர்ந்து முஹம்மது  இஸ்மாயில் வரவேற்புரை நிகழ்த்தினார் , இமாம் அவர்கள் இளைஞர் சமுதாயத்தை பற்றியும் கடந்து செல்ல வேண்டிய  வழிகளை பற்றியும் எடுத்து கூறினார்.   […] Read more

குவளைக்காரர் சலிம் அண்ணன் அன்பளிப்பாக சர்பத் விநியோகம்

குவளைக்காரர் சலிம் அண்ணன்   அன்பளிப்பாக குவளைக்காரர் அலீம் அண்ணன் அவர்கள் மூலியமாக, கோடைவெயிலின் தாகத்தை தணிக்க நமதூரில்   சர்பத் விநியோகம் செய்யப்பட்டது       

நேஷ‌ன‌ல் விம‌ன்ஸ் ஃப்ர‌ண்ட் ம‌ற்றும் மீனாட்சி ம‌ருத்துவ‌ம‌னை த‌ஞ்சாவூர் இணைந்து ந‌ட‌த்திய‌ மாபெரும் இல‌வ‌ச‌ புற்றுநோய் ப‌ரிசோத‌னை

அஸ்ஸ‌லாமு அலைக்கும் (வ‌ர‌ஹ்) நேஷ‌ன‌ல் விம‌ன்ஸ் ஃப்ர‌ண்ட் ம‌ற்றும் மீனாட்சி ம‌ருத்துவ‌ம‌னை த‌ஞ்சாவூர் இணைந்து ந‌ட‌த்திய‌ மாபெரும் இல‌வ‌ச‌ புற்றுநோய் ப‌ரிசோத‌னை ம‌ற்றும் உணவு & உட‌ல் க‌ட்டுப்பாட்டு விழிப்புண‌ர்வு முகாம் கூத்தாந‌ல்லூர் ந‌க‌ரில்  21/01/2017 ந‌டைப்பெற்ற‌து. இர‌த்த‌ப் ப‌ரிசோத‌னை, மார்ப‌க‌ புற்று நோய் ப‌ரிசோத‌னை, க‌ர்ப்ப‌ப்பை வாய் புற்றுநோய் ப‌ரிசோத‌னை (Pap Smear), பையாப்ஸி ப‌ரிசோத‌னை, Ultrasound க‌ருவி மூல‌ம் ப‌ரிசோத‌னை போன்ற‌ ப‌ரிசோத‌னைக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌து. மேலும் வீட்டுத் தோட்ட‌ம் அமைத்த‌ல் (Kitchen Gardening), ப்ளாஸ்டிக்கை த‌விர்த்த‌ல், […] Read more

இரவு நேர மருத்துவ சேவை ஓராண்டு நிறைவு:

இரவு நேர மருத்துவ சேவை ஓராண்டு நிறைவு: இறைவனின் உதவியால் கூத்தாநல்லூர் கேஎன்ஆர் யூனிட்டியின் சார்பாக இரவு நேரத்தில் ஏற்படும் திடீர் மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட “யூனிட்டி மெடிக்கல் சென்டர்” தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, இந்த மருத்துவ மையம் உருவாக ஒருவகையில் காரணமாக இருந்த சமிபத்தில் எங்களை விட்டு பிரிந்த சகோதரர் “ஹிதாயத்துல்லாஹ்” அவர்களின் நினைவாக, இலவச கண் பரிசோதனை முகாம் கேஎன்ஆர் யூனிட்டியின் மெடிக்கல் சென்டரில் நடத்தப்பட்டது. இதற்கு பெரும் […] Read more

KNR UNITY ஒன்று கூடல் நிகழ்ச்சி 2016

அஸ்ஸலாமு அழைக்கும், கடந்த 09-12-2016 அன்று நடந்த KNR UNITY ஒன்று கூடல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடத்து முடிந்தது, ஜும்மா தொழுகை முடிந்து கலந்துகொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிக்கபட்டது, பெருந்திரளாக நமதூர் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,                நிகழ்ச்சியின் துவக்கமாக செயலாளர் யூசுப் அவர்கள்  அனைவரையும் வரவேற்று பேசினார், பின்பு ஊரில் இயங்கி வரும் UMC மருத்துவமனையை பற்றி அதன் செயல்பாடுகளையும் பகல் நேர மருத்துவமனையாக மற்ற […] Read more

KWAB- KOOTHANALLUR WELFARE ASSOCIATION IN BRUNEI

KWAB– KOOTHANALLUR WELFARE ASSOCIATION IN BRUNEI   உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நமது ஊரின் மீது  என்றுமே அக்கறை கொண்டு எங்கு வாழ்ந்தாலும் அவரவர்களின் பங்களிப்பை ஊரின் நலன்கருதி செய்து வருவது நமதூர் மக்களின் சிறப்பு தன்மை. அந்த வகையில் புருணையில் இருந்து செயல்பட்டு வரும் நமதூர் இயக்கமான KWAB– KOOTHANALLUR WELFARE ASSOCIATION IN BRUNEI யின் கலந்துரையாடல் கூட்டம் வெகு சிறப்பாக இனிதே நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் .   இதில் […] Read more

கூத்தாநல்லூரில் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்காக மௌன அஞ்சலி ஊர்வலம்

மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்காக மௌன அஞ்சலி ஊர்வலம் தமிழகத்தின் முதல்வர் அம்மா அவர்களின் மறைவையொட்டி கூத்தாநல்லூர் அஇஅதிமுக நகர கழகத்தின் சார்பாக மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது .   இன்று மதியம் 2.00 மணிக்கு நமதூர் புதுப்பாலத்தில் இருந்து மௌன அஞ்சலி ஊர்வலம் புறப்பட்டு லெட்சுமாங்குடி பாலம் வந்தடைந்தது   மேலும் படங்கள் :        

கூத்தாநல்லூர் நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி

?வரும் (09.12.16) வெள்ளிக்கிழமை நமது கேஎன்ஆர் யூனிட்டி சகோதரர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமீரக வாழ் கூத்தாநல்லூர் இளைஞர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.? இடம்: ஜபீல் பார்க், துபாய். (Near Jafiliya Metro Station) அனுமதி இலவசம்… தேனீர் மற்றும் மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…? தங்களது வருகையை உறுதி படுத்தி கொள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள்…? நட்புடன் கேஎன்ஆர் யூனிட்டி […] Read more

2016 ரமலான் இப்தார் ஒன்றுகூடல் நிகழ்ச்சி

எல்லா வருடத்தை போன்று இந்த வருடமும் கூத்தாநல்லூர் மக்களுக்கான இப்தார் நிகழ்சிகள் அன்னபூர்ணா உணவகத்தில் நடைபெற்றது. பொது மக்கள்  அனைவரும் வருகை தந்து சிறப்பித்தனர், புளியங்குடி இமாம் பிலாலி அவர்களால் சிறப்பு பயான் நடைபெற்றது, இப்தார் நிகழ்சிக்கு வருகை தந்த அனனவருக்கும் யூனிட்டி சார்பாக செயலாளர் யூசுப் அவர்கள் சலத்தையும் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.