Navigate / search

கூத்தாநல்லூர் சென்ட்ரல் மார்க்கெட்

நமதூரில் விற்பனை ஆகும் அணைத்து ஆடுகளும் இங்கு தான் அறுக்கபடுகிறது. மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இந்த இடத்தில் வைத்து ஆடு அறுத்தால் அல்லது சுத்தம் செய்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது, எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனே நடவடிக்கை எடுத்தால் நமது ஊர் பொதுமக்களுக்கு பயனளிக்கும்.

கூத்தாநல்லூர் நகராட்சி செய்தி:

நமதூரில் பல இடங்களில் பொதுமக்களுக்கு குறிப்பாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிய நாய்களை பிடிக்கும் பணியை கூத்தாநல்லூர் நகராட்சி  ஊழியர்கள் துவங்கி உள்ளனர். இதற்காக பலவகையிலும் நகராட்சிக்கு  அழுத்தம் கொடுத்து இந்த பணியை செய்ய தூண்டிய நமதூர் கவுன்சிலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு உள்ளம்  கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.    

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வழங்கும் கல்வி உதவித் தொகை:-

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வழங்கும் கல்வி உதவித் தொகை விண்ணப்ப படிவம். கிடைக்க வேண்டிய கடைசி தேதி 16. 08. 2016 Click here to download Application Form For more information please visit imamscounciltn.com.

அல்லிக்கேணி மைதான உயர் கோபுர மின்விளக்கு

நமது ஊரின்  முக்கிய விளையாட்டு மைதானமான அல்லிக்கேணி  மைதானத்தில் இரவு நேரங்களில் வெளிச்சம் இன்று இருந்து வந்தது அதனால் பல சமுக விரோத செயல்கள்  நடைபெறும் இடமாக மாறியது, நமதூரின் மேல்  அக்கறை கொண்ட நபர்களின்  பெரும் முயற்சியால்  இன்று உயர் கோபுர மின்விளக்கு கொண்டு நிறுவப்பட்டது. இதனால் இரவு நேரங்களிலும் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் மற்றும் அந்த பாதை வழியாக இரவில் செல்பவர்களுக்கும்  மிக பயனுள்ளதாக  அமைந்துள்ளது.

வங்கிகளில் பெண்களுக்கான தனி இட வசதி…

நமது ஊரில் இயங்கி வரும் அணைத்து வங்கிகளிலும் முன்பு பெண்களுக்கு என்று தனி இட வசதி இருந்து வந்தது. கடந்த  சில ஆண்டுகளாக அந்த தனி இடம்  நீக்கபட்டு அனைவரும் ஒரே இடத்தில நிற்க வேண்டிய இன்னல்  ஏற்பட்டது, நமதூரில் பொது நலனில் அக்கறை கொண்ட சகோதரர்களும் வௌிநாட்டில் வசிக்க கூடிய நமதூர் சகோதரர்களும் இந்த செயலை கண்டித்து வங்கிகளில் நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும்  தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர் தற்சமயம் நமதூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் பெண்களுக்கென […] Read more