Navigate / search

ஆட்டோவிற்கு ஒரு மாற்று தீர்வு.

ஆட்டோவிற்கு  ஒரு மாற்று தீர்வு…

நமதூரில் சமீப காலமாக மிக அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் ஆட்டோ… பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் நமதூர்  மாணவிகள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள், மற்றும் பெண்கள் என மிக அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து வாகனம்  ஆட்டோ மட்டுமே, இப்படி நல்ல வருமானத்தை ஈட்டி தரும் இந்த போக்குவரத்தில் ஈடுபடும்  பல ஆட்டோ ஓட்டுனர்களின் தவறான அனுகுமுறை மற்றும் அதி வேகமாக ஓட்டுதல் ,மது அருந்திவிட்டு ஓட்டுதல் போன்றவற்றால்  பல விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகிறது.

மற்றும்  சமீபகாலமாக அதிகமாக விபத்துகளில் ஆட்டோவில் பயணிக்கும் பெண்கள் சிக்குகிறார்கள், அதிலும் எதிரில் வரும் இருசக்கர வாகனங்களையும்  பாதசாரிகளையும் இடித்து காயப்படுத்துவது தொடர்கதையாக ஆகிவிட்டது. அதிலும் இரவு நேரங்களில் தெரு முனைகளில் சில ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்று கூடி மது அருந்திவிட்டு தெருவில் ரகளையில்  ஈடுபடுகின்றனர். ஒரு சில பெண்கள் சம்பந்தமான பிரச்சனைகளும் இப்பொழுது அதிகரித்து வருகிறது ஆனால் வெளியில் தெரிவது இல்லை…….

 

இதற்கு என்ன தான் தீர்வு ????

ஊரின் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமுதாயப்பணியில் ஈடுபடும் சமூக ஆர்வலர்கள் இதை சரி செய்ய முற்பட்டாலும் அதில் எந்த வித மாற்றமும், முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை …

 

இதற்க்கு ஒரு மாற்று  சித்தனை …….

பல நகரங்களில் இருப்பது போல நமதூரில் ஏன் பெண்கள் ஆட்டோ ஓட்டுனர்களை நியமிக்க கூடாது, பல மாற்று மத சகோதரிகள் இதற்க்கு தயாராக இருப்பார்கள். இதை ஒரு சோதனை முயற்சியாக செய்தால் கண்டிப்பக்க வரவேற்பு கிடைக்கும், பெண்களும் பயம் இன்றி பள்ளி கல்லூரிகளுக்கு பயணம் செய்வார்கள். குறிப்பாக அதிவேகமாக பெண்கள் ஓட்ட மாட்டார்கள், பெண்களால் எந்த வித பாதுகாப்பு பிரச்சனைகளும் வராது. மிக முக்கியமாக மது அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டுவது, ஊருக்கே கேட்பது போன்று சினிமா பாடல்களை வைத்து கொண்டு ஊரை சுற்றி வருவது இன்னும் பல பல ஒழுங்கீனங்கள் முற்றிலுமாக அகற்றப்படும். நமதூரில் மீது அக்கறை கொண்ட பல நபர்கள் இதற்காக முயற்சி செய்தால் ஒரே ஒரு பெண் ஓட்டுனரை தாயார் செய்து வெற்றி கண்டு விட்டால் தானாக பல சகோதரிகள் முன்வருவார்கள்.

இதற்காக முயற்சி செய்யலாமா ????

 

woman-auto_647_090715055809
TH-AUTO_ANDAL_1564618f
dc-Cover-q609e7405olvqit0l9f5jt6lk5-20160409012912.Medi

Comments

Imthiaz

You will be surprised to how many women from our place will be interested if given the opportunity. Very good initiative we should atleast test it with couple drivers to begin with.

Leave a comment