Navigate / search

கூத்தாநல்லூரில் 15 ஆண்டாக செயல்படாத பஸ் நிலையம்

கூத்தாநல்லூரில் 15 ஆண்டுகளாக பஸ் நிலையம் செயல்படாததால், போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் சாக்கடை வடிகால் இல்லாததால் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. 11வது வார்டில் கொசு மருந்து அடிக்காததால் வைரஸ் காய்ச்சலில் ஒருவர் பாதிப்படைந்துள்ளார். அதேபோல் 5வது வார்டு நகர்மன்ற தலைவர் வசிக்கும் வார்டாகும். இங்கு குளம், சாலை, அம்மா உணவகம், வீடுகள் அருகில் எங்கு பார்த்தாலும் சாக்கடை நீர் தேங்கி உள்ளது. அனைத்து வார்டுகளிலும் சாலைகளும் மோசமாக உள்ளன. சாலைகளை சீரமைத்து, சாக்கடை நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

அதேபோல் கூத்தாநல்லூரில் திருவாரூர் சாலையில் 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.30 லட்சம் செலவில் பஸ் நிலையம் கட்டப்பட்டது. பஸ் நிலையம் திறந்து ஒரு சில மாதங்கள் மட்டுமே இயங்கியது. அதன்பின் பஸ்கள் அனைத்தும் லட்சுமாங்குடியிலேயே பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன. அந்த பகுதியில் தரைக்கடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த திருவாரூர் சாலையில் கட்டப்பட்ட பஸ் நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செயல்படாத பஸ் நிலையத்தில் தற்போது ஒரு சில ஆம்னி பஸ்கள் மட்டும் பயணிகளை ஏற்றிச் செல்கிறது.

இது தொடர்பாக கூத்தாநல்லூரை சேர்ந்த காதர்உசேன் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் கூறுகையில், கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள பல்வேறு வார்டுகளில் சாக்கடை நீர் தேங்கி வடிகால் இல்லாமல் வடியாத நிலை உள்ளது. சாலைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. அரசு கூத்தாநல்லூரை புதிய தாலுகாவாக அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்தினால், போக்குவரத்து நெரிசல் குறையும். அந்த இடம் ஆடு, மாடுகள் அடையும் மந்தையாக மாறி விட்டது என்றனர்.

 

 

400x400_image58247192
NEW BUS STAND

Leave a comment