Navigate / search

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நீதிபதிகள் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தனர்

சீமைக்கருவேல மரங்கள்

ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின்படி சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி பல்வேறு மாவட்டங்களில் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் தமக்கு சொந்தமான அலுவலகங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற நிர்வாகம் மற்றும் திருவாரூர் வக்கீல்கள் சங்கம் சார்பில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியது. இந்த பணியினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சீனிவாசன், தலைமை குற்றவியல் நீதிபதி சத்தியமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் மகிளா நீதிபதி செந்தில்குமரேசன், வக்கீல்கள் சங்க தலைவர் மணிகண்ணன், செயலாளர் கண்ணன், பொருளாளர் அசோக்குமார், அரசு வக்கீல் சம்பத்குமார், கூடுதல் வக்கீல் சரவண செல்வன் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

குடவாசல்

அதேபோல குடவாசல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்கள், சாலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் பேரூராட்சிக்குட்பட்ட தனியாருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் இதர துறைகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றவும் பேரூராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

201702220136486029_Tree-removal-process-initiated-judges-cimaikkaruvela_SECVPF

Leave a comment