Navigate / search

SDPI கட்சியின் சார்பில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் கருவேல மரங்கள் அகற்றும் பணி

SDPI கட்சியின் சார்பில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் கருவேல மரங்கள் அகற்றும் பணி

SDPIகட்சியின் சுற்றுசுழல் துறை சார்பாக தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடை பெற்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக (20-03-2017) இன்று திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் ரஹ்மானியா தெருவில் சுமார் 10ற்க்கும் மேற்ப்பட்ட ஏக்கர் பரப்பளவில் இருக்கும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியினை SDPIகட்சியின் சுற்றுச்சூழல் துறை மாநில தலைவர் D.ரெத்தினம் அண்ணாச்சி அவர்கள் துவங்கி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் M.A.அப்துல் லத்தீப் தலைமை தாங்கினார் மேலும் மாவட்ட பொதுச் செயலாளர் J.ஷேக் தாவூது வரவேற்புறை ஆற்றினார். SDTU மாவட்ட அமைப்பாளர் ஷேக் தாவூது, நகர தலைவர் அப்துல் ராஜிக் மற்றும் நகர, கிளை செயல்வீரர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஜமாத் செயலாளர் ஷேக் அப்துல் காதர், ஜமாத் உறுப்பினர் ரபீயுத்தீன் மற்றும் L.B.மைதீன் சமூக ஆர்வலர்கள் குவளைக்காரர் அப்துல் அலீம், கோஸ் அன்வர்தீன், க.ம.ச.ம அன்வர்தீன், நாட்டாண்மை ஹாஜா பஹ்ருத்தீன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் மேலும் பல்வேறு சமூக சேவைகள் செய்ய உள்ளனர்  ஆகையால் ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

SDPIகட்சியின் சார்பில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் கருவேல மரங்களை அகற்றும் பணி நேற்று இரண்டாம் நாளாக JCB இயந்திரத்தின் உதவியுடன் ஜமாலியா தெருவில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் வருகை தந்து

SDPI கட்சி
கூத்தாநல்லூர் நகரம்

 

This slideshow requires JavaScript.

Leave a comment