கே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி – 2017
கே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி – 2017
ஹிஜ்ரி 1438 ஆண்டு ரமலான் பிறை 14
அன்று கே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
நமதூர் மக்கள் திரளாக பங்கு பெற்று சிறப்பித்தனர் , நிகழ்ச்சியை கே.என்.ஆர் யூனிட்டியின் தலைவர் AGM பைரோஸ் கான் தொடங்கி வைக்க அதனை தொடர்ந்து முஹம்மது இஸ்மாயில் வரவேற்புரை நிகழ்த்தினார் , இமாம் அவர்கள் இளைஞர் சமுதாயத்தை பற்றியும் கடந்து செல்ல வேண்டிய வழிகளை பற்றியும் எடுத்து கூறினார்.
சகோதரர் யூசுப் அவர்கள் கே.என்.ஆர் யூனிட்டி ஊரில் நடத்தி கொண்டிருக்கும் UMC (யூனிட்டி மெடிக்கல் சென்டர் ) இரவு நேர மருத்துவமனை பற்றியும் அதை அடுத்த கட்டமாக 24 மணிநேரமாக மருத்துவமணைக்காக எடுத்து வரும் முயற்சியையும் விளக்கி கூறினார். இறுதியாக ரியாஸ் அவர்களின் நன்றி உரையுடன் முடித்து, இப்தார் விருந்து வழங்கபட்டது.
அபுதாபியில் இருந்தும் மற்ற அமீரகத்தில் இருத்தும் பெருவாரியான நமதூர் மக்கள் கலந்து கொண்டனர்.
.