Navigate / search

கூத்தாநல்லூர்அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சென்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்

ஜனவரி 2018 முதல் கர்ப்பம் அடைந்துள்ள அனைத்து பெண்களும் நமதூர் பெரியக்கடைத்தெரு சலீமா காம்ப்ளக்ஸ் எதிர்புறம் உள்ள அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சென்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்

கர்ப்பம் அடைந்துள்ள பெண்கள் அரசு ஆஸ்பத்திரியிலோ அல்லது பிரைவேட் மருத்துவமனையில் பிரசவம் பார்த்தாலும் கண்டிப்பாக இங்கே பதிவு செய்ய வேண்டும்

கர்ப்பமுற்ற மூன்று மாத காலத்தில் இந்த பதிவை அவசியம் செய்ய வேண்டும்

தங்களது கர்ப்ப நிலையை பதிவு செய்யும் பொழுது தங்கள் டாக்டர் வசம் காண்பித்த மருத்துவ சீட்டு / ஸ்கேன் ரிப்போர்ட் / இரத்த பரிசோதனை ரிசல்ட் / ஆதார் அட்டை நகல் / பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்ற ஆவணங்களை எடுத்து சென்று பதிவு செய்ய வேண்டும்

தாங்கள் பதிவு செய்து அடையாள அட்டையும்
குறியீடு நம்பர் ஓன்றும் தங்களுக்கு வழங்கப்படும்

தாய்மை அடைந்துள்ள அனைத்து சகோதரிகளும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து மகப்பேறு மருத்துவமனையிலும் தகவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நமதூர் பகுதி முழுவதும் உள்ள பெண்கள் தற்சமயம் பதிவு செய்து வருகிறார்கள்

இப்படி பதிவு செய்ய தவறினால் தனியார் மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட மாட்டது என்று அனைத்து ஆஸ்பத்திரி வளாகங்களிலும் அறிவிப்பு நோட்டிஸ் ஓட்டப்பட்டுள்ளது

நமதூர் சகோதரிகள் அனைவரும் விழிப்புடன் இருந்து பதிவு செய்வீர்

நமதூர் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நான்கு செவிலியர்கள் ( நர்ஸ்கள் ) நியமிக்கப்பட்டுள்ளனர்

மேலும் இது சம்பந்தமான விரிவான தகவலுக்கு
என்னை அனுகலாம்

நஜ்முதின் எம்.சி
98426 71558

பொது தகவலுக்காக

Leave a comment