Navigate / search

GET TO GETHER – 8/12/2017 Friday

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் வருகின்ற 08/12/2017 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் நமதூர் மக்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி நமது KNR Unity நண்பர்களால் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது, தொழுகைக்கு பின் மதிய உணவும் பின்பு விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமதூர் மக்கள் அனைவரையும் இதில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது இப்படிக்கு, நிர்வாகத்தினர் KNR Unity – UAE

அன்பு சகோதரர்களே: ஆதரவு தாருங்கள்….

ஊரில் தொழில் செய்யும் நமதூர் சகோதரர்களுக்கும் வீட்டில் சிறுசிறு வியாபாரம் செய்யும் நமது சகோதரிகளுக்கும் ஆதரவு தாருங்கள்…. நமதூர் மக்களை நம்பிதொழில் தொடங்கி, ஊரில் தங்கி, தன் குடும்பம் மற்றும் சொந்தங்களுக்கும், ஊருக்கு பாதுகாப்பாகவும் இருக்ககூடிய நபர்களுக்கு வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் தங்களது குடும்பத்தாரிடம் கூறி நமதூர் மக்ககளுக்கு ஆதரவுதர கூறுங்கள். கண்ணுக்கு தெரியாத ஒருவன் ஒரு ரூபாய் குறைவாக தரும் காரணத்தால் பெட்ரோல் செலவுசெய்து சென்று வாங்குவதை விட அந்த ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் […] Read more

நகராட்சியை பாதுகாக்கும் மாடுகள்…..

ஊரில் சுற்றித்திரிந்த மாடுகளை (கமாலியா தெரு, நேருஜி ரோடு, பெரிய தெரு, மேலக்கடைத்தெரு ஆகிய பகுதிகளில்) அதிகாலை 3.00 மணிக்கு பிடித்து மமகவினர் நகராட்சி அலுவலகத்தில் விட்டுள்ளனர். இனியாவது கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் விழித்துக்கொள்ளுமா?…

ஜஷ்ன மீலாத் சொஸைட்டி

ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் புதிய தலைவராக J,M,ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்  தேர்வு! புதிய செயலாளர்  P.S.அன்வர்தின் தேர்வு பிரசித்திப்பெற்ற ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் பொதுக்குழு இன்று காலை கூடியது.இதில் புதிய நிர்வாகிகளாக இவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக T.M.பெரிய அமீன்,NAM.அப்துல் அலிம் T.M.தமிஜ்தின் உள்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவராக ஹாஜி PKM.அப்துல் மாலிக் துணைச் செயலாளர் K.A.நூருல் கைஸ் உள்பட மேலும் சிலர்மேற்கண்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டர் மற்றொரு துணைத் தலைவர் (JMS)S.E.H.முஹம்மது மைதின் மற்றும் துணைச் செயலாளர் A.A.ஜெக்கரிய்யா(SS&CO சனோபர் […] Read more

ஹஜ் பயண வழியனுப்பு

இன்று 01.08.2017 இஷா தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளிவாயிலில் இருந்து நமதூர் சகோதர சகோதரிகள் புனிதமிக்க ஹஜ் பயணம் புறப்பட இருக்கிறார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் News By: நஜ்முதின் எம்.சி 01.08.2017

மழை வேண்டி பைத்து

கூத்தாநல்லூர் செய்தி🌹 இன்று 28.07.2017 ஜீம்ஆ தொழுகைக்கு பிறகு நமதூர் சின்னப்பள்ளி வாயிலும் ஆலிம் சாஹிப்அப்பா தைக்கால் பள்ளியிலும் மழை வேண்டி மழை பைத்து நடைபெறும் பொது தகவலுக்காக நஜ்முதின் எம்.சி 28.07.2017

சேவலி ஹபீபுன்னிஸா மௌத்து

63.A. மஸ்ஜிதியா தெரு சேவலி அப்துல் ஹமீது மகளும், சின்னவாப்பு முஹம்மது யூசூப் மனைவியும், சின்னவாப்பு கமருல்ஜமான் / அப்துல் அலீம் தாயாரும் , அல்வானி முஹம்மது அப்துல்லா / சேவுராய் முஹம்மது ஆரிப் மாமியாருமான ,சேவலி ஹபீபுன்னிஸா வயது 81 மௌத்து இன்று மாலை 4.00 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

நீடாமங்கலம் மக்களே நமது ஊர் அழிய போவது ஆய்வு அறிக்கையாகவே வந்துவிட்டது

நீடாமங்கலம் மக்களே நமது ஊர் அழிய போவது ஆய்வு அறிக்கையாகவே வந்துவிட்டது நம்ம கவனிக்க மறந்தது இன்று இந்த அளவிற்கு வந்துவிட்டது தாய்மண்ணை காக்க களமிரங்க வேண்டும்    

*”மஜ்லிஸ் தர்பியத்துன் நிஸா பெண்கள் மத்ரஸா”

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 16- A ஹமீதிய்யா தெரு, (விடுதி பள்ளி எதிரில்) கூத்தாநல்லூர் முகவரியில் இயங்கி வரும் நமது *”மஜ்லிஸ் தர்பியத்துன் நிஸா பெண்கள் மத்ரஸா”* ரமழான் விடுமுறைக்குப்பின் இன்ஷா அல்லாஹ் 10.07.2017 திங்கள் கிழமை 9.00 மணி முதல் திறக்கப்படுகிறது. பழைய – புதிய மாணவியர்கள் வருகை தர வேண்டுகிறோம். புதிய மாணவியர்கள் பெற்றோர்களுடன் வரவும். மதிய நேர பெண்களுக்கான வகுப்பும் நடைபெறுகிறது. மக்தப் வகுப்புகள் மாலை 05.00 முதல் 06.30 மணி வரை […] Read more

கே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி – 2017

கே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி – 2017   ஹிஜ்ரி 1438 ஆண்டு ரமலான் பிறை 14 அன்று கே.என்.ஆர் யூனிட்டியின்  இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. நமதூர் மக்கள் திரளாக பங்கு பெற்று சிறப்பித்தனர் , நிகழ்ச்சியை கே.என்.ஆர் யூனிட்டியின் தலைவர் AGM பைரோஸ் கான் தொடங்கி வைக்க அதனை தொடர்ந்து முஹம்மது  இஸ்மாயில் வரவேற்புரை நிகழ்த்தினார் , இமாம் அவர்கள் இளைஞர் சமுதாயத்தை பற்றியும் கடந்து செல்ல வேண்டிய  வழிகளை பற்றியும் எடுத்து கூறினார்.   […] Read more