Navigate / search

கூத்தாநல்லூர் அருகே பயிர்கள் கருகியதால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கூத்தாநல்லூர், கூத்தாநல்லூர் அருகே பயிர்கள் கருகியதால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். விவசாயி திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓவர்ச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 55). விவசாயி. இவருக்கு வைஜெயந்திமாலா என்ற மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். துரைராஜூக்கு ஓவர்ச்சேரியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த 2 ஏக்கரில் துரைராஜ் சாகுபடி செய்து வந்தார். தற்போது தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகியது. இதனால் துரைராஜ் மனம் […] Read more

கூத்தாநல்லூரில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம்

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் 12-11-2016 அன்று  “பொது சிவில் சட்டம் தேச ஒற்றுமைக்கு எதிரானது” என்ற தலைப்பில் மத்திய பா.ஜ.க அரசு திணிக்க முயலும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ஃபாயிஜா ஷஃபிக்கா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் ஷர்மிளா பானு அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் தஸ்லிமா அவர்களும் […] Read more

இன்று பணம் மற்ற செல்லும் நமதூர் மக்களின் கவனத்திற்கு.

இன்று பணம் மற்ற செல்லும் நமதூர் மக்களின் கவனத்திற்கு. நமதூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அறிவிப்பு. பொதுமக்கள் இந்த அறிவிப்பிற்கு ஏத்தவாறு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றது. நன்றி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – கூத்தாநல்லூர் கிளை  

கூலான் அப்துல் ரஹ்மான் வபாத்

அப்துல் ரஹ்மான் ரோடு   கூலான் சேக் மதார்ஸா மகனும் ஒசமியா முஹம்மது யூசூப் மருமகனும் ஒசமியா ஹாஜா ஜியாவுதின் மச்சானும் அவுக்கூர்சா பசீர் அஹமது / ஆதனூரார் சிராஜ் மைதின் மாமனாரும் கூலான் ஹாஜா பஹ்ருதின் தகப்பனாருமான கூலான் அப்துல் ரஹ்மான் வயது 86 மௌத்து இன்று இஷா தொழகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்   தொடர்புக்கு கூலான் ஹாஜா பஹ்ருதின் செல்  9688559955

அசப்பா ஆயிஷா நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 43 அன்வரிய்யா தெரு, அசப்பா அஹமது மைதீன் மகளும், பழக்கடையார் அப்துல் ரஹீம் மனைவியும், டொக்கு அப்துல் கபூர் / மனைக்காலர் அமீர் அலி மாமியாரும், தஞ்சாவூரார் அமீர் சுல்தான் சம்மந்தியும் , பழக்கடையார் சாகுல் ஹமீது/ செய்யது இபுறாஹிம் தாயாருமான அசப்பா ஆயிஷா நாச்சியா வயது 68 வபாத். இன்ஷா அல்லாஹ்  இன்று பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

கூத்தாநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்குமாறு கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்குமாறு கோரிக்கை விடுத்தும் நகராட்சியும், நெடுஞ்சாலைத் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை, விரைந்து சீரமைக்க வேண்டும் என, ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் டி.ஹெச்.அலிமைதீன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: வடபாதிமங்கலத்தில் இருந்து கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி வழியாக குடவாசல் வரை செல்லும் சாலை கடந்த 6 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. குறிப்பாக கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. சிறு மழை பெய்தால் […] Read more

*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!*

*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!* வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளை வக்பு வாரிய சொத்துக்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அல்லா வின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஏழை, எளியவர்களின் நலனுக்காக அளிக்கப்பட்ட வக்பு சொத்துக்கள் சுமார் 4 லட்சம் ஏக்கர் நமது நாட்டில் உள்ளது. அதில் 3 லட்சம் ஏக்கர் பதிவு செய் யப்பட்டவை. இது தேசிய சொத்து. அந்த சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் […] Read more

நீர் ஆதாரம், நமது வாழ்வாதாரம்.

                       நமது கூத்தாநல்லூரில் தற்போது சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது பருவக்கால மழை சரியாக பொழியாதது மற்றும் பொழிந்த மழையினை வாய்க்கால் , குளங்கள் மூலம் சேமிக்க பொதுமக்கள் தவறியது. ஆற்றில் புரண்டோடும் நீர் நம் முன்னோர்களால் சிறந்த முறையில் தொலைநோக்கு பார்வையோடு அவர்களது சந்ததியுனர்களுக்காக வழி வகுக்கப்பட்டு, வாய்க்கால்கள் வாயிலாக […] Read more

பொது சிவில் சட்டம்

பாஜக அரசு கொண்டு வர துடிக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் வண்ணமாக முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் வழிகாட்டுதலுக்கினங்க நாளை நமதூர் கூத்தாநல்லூர் அனைத்து பள்ளிவாசலில் ஜீம்மா தொழுகைக்குப் பிறகு கூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக ஜமாத்தார்கள், SDPI, தமுமுக சகோதரர்கள் கையெழுத்து வாங்க இருப்பதால் அனைவர்களும்  கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதன் ஆபத்தை அனைவரும் உணர்ந்து அவரவர்கள் முயற்சி எடுத்து அதிக படியான கையெழுத்து வாங்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்கிறோம்