Navigate / search

புனித மிக்க ஹஜ் பயணம் வழியனுப்பு விழா

    கூத்தாநல்லூர் செய்தி புனித மிக்க ஹஜ் பயணம் வழியனுப்பு விழா <><><><><><><><><><><><> இன்சா அல்லாஹ் இன்று 12.08.2016 இஷா தொழுகைக்கு பிறகு சின்னப் பள்ளி வாயிலில் இருந்து நமதூரைச் சார்ந்த 12 நபர்கள் புனித மிக்க ஹஜ் பயணம் புறப்படுகிறார்கள் நமதூர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன் செய்தி : நஜ்முதின் எம்.சி 12.08.2016

பூதமங்கலம் ஆதனூறார் மெஹர் நிஷா வபாத்

11-08-2016 48 A ஆஸ்பத்திரி லைன் (சின்ன கூத்தாநல்லூர் ) பூதமங்கலம் ஆதனூறார் அப்துல் காதர் மகளும், ஷா வீட்டு முஹம்மது சுல்தான் (அடி சுல்தான்) மனைவியும், லியாகத் அலி/ ஷாபி முஹம்மது சகோதரியும், சாதிக் பாட்சா / பைஜுல் நவாஸ்/ முஹம்மது ரபி தாயாரும், படாரன் கத்தார் பாட்ஷா அத்திக்கடை நைஸ் பதுருதீன் மாமியாருமான மெஹர் நிஷா ( வயது 67) மௌத்து. இன்ஷா அல்லாஹ் இன்று மதியம் 1-00 மணிக்கு சின்னப்பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் […] Read more

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சாவு போலீஸ் விசாரணை

கூத்தாநல்லூர் அருகே உள்ள அத்திக்கடை குட்ரஷா ரகீம் தெருவை சேர்ந்தவர் குத்புதீன் (வயது40). இவருக்கு தொண்டையில் புண் இருந்ததாக தெரிகிறது. இதற்காக சிகிச்சை பெறுவதற்காக அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது குத்புதீனுக்கு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பின் அவர் மயங்கி விழுந்து இறந்தார். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன http://www.dailythanthi.com/News/Districts/Thiruvarur/2016/08/08014434/Police-are-investigating-the-death-of-those-treated.vpf

கல்வி சேவைக்கான உயரிய விருது

நமதூரை சார்ந்த மரியாதைக்குரிய அண்ணன் பேராசிரியர் அலி அவர்கள் புரூணை நாட்டில் கல்வி சேவைக்கான உயரிய விருதினை அந்நாட்டு மன்னர் சுல்தானிடமிருந்து பெற்றுக்கொண்டார் . அவர்களின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம்.  

வாரத்திற்கு ஒருமுறையாவது குப்பைகளை அகற்ற கோரிக்கை

கூத்தாநல்லூர் – காந்தி நகரில் குப்பைகளை அகற்றும் பணியை நகராட்சி செய்யவில்லை. எனவே அங்கு குப்பைகள் காற்றில் பறந்து அந்த தெரு முழுவதும் பரவி கிடக்கின்றது இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அந்த தெருவாசிகள் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர் .

S.K.ஜபருல்லாஹ் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் தன்னார்வ தொண்டு பணியில் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்புடன் பணிபுரிந்தமைக்காக கூத்தாநல்லூர் S.K.ஜபருல்லாஹ் அவர்களுக்கு இன்று 6/8/2016 HONOURABLE MDM HALIMAH YACOB SPEAKER MEMBER OF PARLIAMENT SINGAPORE அவர்களால் விருது வழங்கப்பட்டது. வாழ்த்துக்கள் செய்தி :அப்துல் அலிம்

கூத்தாநல்லூர் சென்ட்ரல் மார்க்கெட்

நமதூரில் விற்பனை ஆகும் அணைத்து ஆடுகளும் இங்கு தான் அறுக்கபடுகிறது. மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இந்த இடத்தில் வைத்து ஆடு அறுத்தால் அல்லது சுத்தம் செய்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது, எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனே நடவடிக்கை எடுத்தால் நமது ஊர் பொதுமக்களுக்கு பயனளிக்கும்.

கூத்தாநல்லூர் நகராட்சி செய்தி:

நமதூரில் பல இடங்களில் பொதுமக்களுக்கு குறிப்பாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிய நாய்களை பிடிக்கும் பணியை கூத்தாநல்லூர் நகராட்சி  ஊழியர்கள் துவங்கி உள்ளனர். இதற்காக பலவகையிலும் நகராட்சிக்கு  அழுத்தம் கொடுத்து இந்த பணியை செய்ய தூண்டிய நமதூர் கவுன்சிலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு உள்ளம்  கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.    

அல்லிக்கேணி மைதான உயர் கோபுர மின்விளக்கு

நமது ஊரின்  முக்கிய விளையாட்டு மைதானமான அல்லிக்கேணி  மைதானத்தில் இரவு நேரங்களில் வெளிச்சம் இன்று இருந்து வந்தது அதனால் பல சமுக விரோத செயல்கள்  நடைபெறும் இடமாக மாறியது, நமதூரின் மேல்  அக்கறை கொண்ட நபர்களின்  பெரும் முயற்சியால்  இன்று உயர் கோபுர மின்விளக்கு கொண்டு நிறுவப்பட்டது. இதனால் இரவு நேரங்களிலும் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் மற்றும் அந்த பாதை வழியாக இரவில் செல்பவர்களுக்கும்  மிக பயனுள்ளதாக  அமைந்துள்ளது.

வங்கிகளில் பெண்களுக்கான தனி இட வசதி…

நமது ஊரில் இயங்கி வரும் அணைத்து வங்கிகளிலும் முன்பு பெண்களுக்கு என்று தனி இட வசதி இருந்து வந்தது. கடந்த  சில ஆண்டுகளாக அந்த தனி இடம்  நீக்கபட்டு அனைவரும் ஒரே இடத்தில நிற்க வேண்டிய இன்னல்  ஏற்பட்டது, நமதூரில் பொது நலனில் அக்கறை கொண்ட சகோதரர்களும் வௌிநாட்டில் வசிக்க கூடிய நமதூர் சகோதரர்களும் இந்த செயலை கண்டித்து வங்கிகளில் நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும்  தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர் தற்சமயம் நமதூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் பெண்களுக்கென […] Read more