Navigate / search

புனித மிக்க ஹஜ் பயணம் வழியனுப்பு விழா

    கூத்தாநல்லூர் செய்தி புனித மிக்க ஹஜ் பயணம் வழியனுப்பு விழா <><><><><><><><><><><><> இன்சா அல்லாஹ் இன்று 12.08.2016 இஷா தொழுகைக்கு பிறகு சின்னப் பள்ளி வாயிலில் இருந்து நமதூரைச் சார்ந்த 12 நபர்கள் புனித மிக்க ஹஜ் பயணம் புறப்படுகிறார்கள் நமதூர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன் செய்தி : நஜ்முதின் எம்.சி 12.08.2016

பூதமங்கலம் ஆதனூறார் மெஹர் நிஷா வபாத்

11-08-2016 48 A ஆஸ்பத்திரி லைன் (சின்ன கூத்தாநல்லூர் ) பூதமங்கலம் ஆதனூறார் அப்துல் காதர் மகளும், ஷா வீட்டு முஹம்மது சுல்தான் (அடி சுல்தான்) மனைவியும், லியாகத் அலி/ ஷாபி முஹம்மது சகோதரியும், சாதிக் பாட்சா / பைஜுல் நவாஸ்/ முஹம்மது ரபி தாயாரும், படாரன் கத்தார் பாட்ஷா அத்திக்கடை நைஸ் பதுருதீன் மாமியாருமான மெஹர் நிஷா ( வயது 67) மௌத்து. இன்ஷா அல்லாஹ் இன்று மதியம் 1-00 மணிக்கு சின்னப்பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் […] Read more

உங்கள் வாழ்க்கைத் துணைவி

உங்கள் வாழ்க்கைத் துணைவி هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن ‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187). திருமணத்தின் மூலம் நீங்கள் ஒரு பெண்ணை வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்!நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் […] Read more

டப்பா அல்ஹாஜ் அப்துல் சலாம் மௌத்து

கூத்தாநல்லூர் செய்தி 22.எ. அப்துல் ரஹ்மான் ரோடு கு.சே. ( டப்பா ) முஹம்மத அப்துல்லா மகனும் தி.கா. முஹம்மது சுல்தான் மருமகனும் பி.எம். நூர் மைதின் / பி.எ. முஹம்மது அப்துல்லா / ஜே.எ. ஹாஜா மைதின் இவர்களின் மாமனாரும் கே.கே. (டப்பா )முஹம்மது இக்பால்  சகோதரர்களின் சிறிய தகப்பனாரும் கே.எ. (டப்பா) செய்யது அஹமது / கே.எ. ஜபருல்லா இவர்களின் தகப்பனாருமான டப்பா அல்ஹாஜ் அப்துல் சலாம் வயது 89 மௌத்து நாளை 09.08.2016 மதியம் […] Read more

திருச்சுழியார் ஹஜ்ஜா தாஜீன்னிசா வபாத்

23. பாய்க்காரத் தெரு மர்ஹீம திருச்சுழியார் அப்துல் ரஹிம் மகளும் மர்ஹீம் தாவூது அப்துல் கரிம் மகளும் மர்ஹீம் தாவூது பசீர் அகமது மனைவியும் தொ.இ. ஹாஜா மைதின் மாமியாரும் திருச்சுழியார் பசிர் அகமது / நிஜாமுதின் சகோதரியும் தாவூது முஹம்மது இக்பால் தாயாருமான திருச்சுழியார் ஹஜ்ஜா தாஜீன்னிசா வயது 69 மௌத்து நாளை 09.08.2016 செவ்வாய் கிழமை காலை 10.00 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சாவு போலீஸ் விசாரணை

கூத்தாநல்லூர் அருகே உள்ள அத்திக்கடை குட்ரஷா ரகீம் தெருவை சேர்ந்தவர் குத்புதீன் (வயது40). இவருக்கு தொண்டையில் புண் இருந்ததாக தெரிகிறது. இதற்காக சிகிச்சை பெறுவதற்காக அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது குத்புதீனுக்கு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பின் அவர் மயங்கி விழுந்து இறந்தார். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன http://www.dailythanthi.com/News/Districts/Thiruvarur/2016/08/08014434/Police-are-investigating-the-death-of-those-treated.vpf

கல்வி சேவைக்கான உயரிய விருது

நமதூரை சார்ந்த மரியாதைக்குரிய அண்ணன் பேராசிரியர் அலி அவர்கள் புரூணை நாட்டில் கல்வி சேவைக்கான உயரிய விருதினை அந்நாட்டு மன்னர் சுல்தானிடமிருந்து பெற்றுக்கொண்டார் . அவர்களின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம்.  

வாரத்திற்கு ஒருமுறையாவது குப்பைகளை அகற்ற கோரிக்கை

கூத்தாநல்லூர் – காந்தி நகரில் குப்பைகளை அகற்றும் பணியை நகராட்சி செய்யவில்லை. எனவே அங்கு குப்பைகள் காற்றில் பறந்து அந்த தெரு முழுவதும் பரவி கிடக்கின்றது இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அந்த தெருவாசிகள் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர் .

S.K.ஜபருல்லாஹ் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் தன்னார்வ தொண்டு பணியில் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்புடன் பணிபுரிந்தமைக்காக கூத்தாநல்லூர் S.K.ஜபருல்லாஹ் அவர்களுக்கு இன்று 6/8/2016 HONOURABLE MDM HALIMAH YACOB SPEAKER MEMBER OF PARLIAMENT SINGAPORE அவர்களால் விருது வழங்கப்பட்டது. வாழ்த்துக்கள் செய்தி :அப்துல் அலிம்