*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!*
*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!*
வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை
இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளை வக்பு வாரிய சொத்துக்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அல்லா வின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஏழை, எளியவர்களின் நலனுக்காக அளிக்கப்பட்ட வக்பு சொத்துக்கள் சுமார் 4 லட்சம் ஏக்கர் நமது நாட்டில் உள்ளது. அதில் 3 லட்சம் ஏக்கர் பதிவு செய் யப்பட்டவை. இது தேசிய சொத்து. அந்த சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் அவை அடகு வைக்கப்பட்டும், விற்கப் பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. அத்தகைய செயல்களெல்லாம் அதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களாலேயே செய்யப்படுகின்றன என்பதுதான் கொடுமை.
ஆந்திராவில் ஆட்சியிலிருந்த மன் னர்களால், சேவை நோக்கங்களுக்காக ஏராளமான நிலங்களும், சொத்துக்களும் வழங்கப்பட்டன. இத்தகைய வக்பு சொத் துக்களுக்கு 800 ஆண்டுகால பழமை உண்டு. நாடாளுமன்ற மேல்சபை உதவித் தலைவர் ரஹ்மான்கானின் கூற்றுப்படி, இந்தியாவில் பாதுகாப்புத்துறை, ரயில்வேத்துறைக்கு அடுத்தபடியாக வக்பு துறைக்குத் தான் அதிக சொத்துக்கள் உள்ளன. இந்தியாவில் 35 வக்பு வாரியங்கள் உள்ளன. அவற்றில் பெரும் பாலானவை செயல்பாட்டில் இல்லை. பெரும்பாலான மாநிலங்களில் வக்பு வாரிய பொறுப்பில் ஆளும் கட்சி ஆதரவாளர்களே உள்ளனர்.1954 வக்பு வாரிய சட்டம், 1995 வக்பு வாரிய சட்டங்களின் படி, மாநிலங்களில் வக்பு வாரியங்களை அமைத்து, செயல்படுத்தும் அதிகாரங் கள் மாநில அரசுகளுக்கே அதிகம் உள்ளன. பல மாநிலங்களிலும் பெரிய நிலத் திமிங்கலங்களின் கைகளிலும், பெரும் கட்டுமான நிறுவனங்களின் கைகளிலும் தான் வக்பு சொத்துக்கள் சிக்கியுள்ளன. அங்கு மிகப் பெரிய ஊழலின் உறைவிட மாகவே வக்பு வாரியங்கள் உள்ளன.
வக்பு குறித்த நாடாளுமன்றக் குழு ஓராண்டுக்கு முன்னர் ஒரு அறிக்கை யைச் சமர்ப்பித்தது. அதன் தலைவராக மாநிலங்களவை துணைத் தலைவர் ரகுமான்கான் இருந்தார். அந்த அறிக்கை யில், வக்பு வாரிய சொத்துக்கள் உரிய முறையில் பயன்படுத்தப் பட்டிருந்தால் வேலையின்மை, கல்விக்கான வாய்ப் பின்மை மற்றும் வறுமை ஆகிய பிரச் சனைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது 70 சதவிகித சொத்துக்களும் ஆக்கிரமிக்கப்பட்டோ அல்லது அபகரிக்கப்பட்டோ உள்ளன. மீதி 30 சதவிகித சொத்துக்களை முறையாகப் பயன்படுத்தினால் கூட, பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இயலும் என்று அந்த குழு கருதியது. ஆனால் தற்போது, மீதமுள்ளவைகளைக் கூட கொள்ளையடிக்க முனைப்பான முயற்சி கள் நடைபெற்று வருகின்றன. வக்பு வாரியங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தாலே, மத விஷயங்களில் தலையிடுவதாகக் கூறிவிடுகின்றனர் இந்த சுயநலமிகள் என்று அத்யப் சித்திக் எனும் பிரபல வழக்கறிஞர் கூறு கிறார். 1995ஆம் ஆண்டு வக்பு சட்டம் ஊழலுக்கு மேலும் வழி வகுத்து விட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.
1997ல் தமிழ்நாடு வக்பு வாரியம், சென்னை திருவல்லிக்கேணியில் மிகவும் விலை மதிப்புள்ள பகுதியில் இருந்த 1710 சதுர அடி நிலத்தை வெறும் 3 லட்சம் ரூபாய்க்கு விற்க முடிவெடுத்தது.
மும்பையில் மகாராஷ்டிர வக்பு வாரியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அல்டமவுன்ட் சாலையில் 4532 சதுர அடி நிலத்தை வெறும் ரூ.16 லட்சத்திற்கு முகேஷ் அம்பானிக்கு விற்பனை செய்தது. அதில் அவர் 27 மாடியில் ஒரு பிரம்மாண்டமான மாளிகையைக் கட்டினார். பெங்களூரில் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள மிகப்பெரிய ஓட்டலைக் கட்டியுள்ள வின்சர் மேனர் ஓட்டல் நிர்வாகம், மாத வாடகையாக வெறும் ரூ. 12000 மட்டுமே கொடுக்கிறது. பரிதாபாத்தில் வக்பு வாரியம் 5 ஏக்கர் நிலத்தை பல வருடங் களாக 11 மாத குத்தகைக்கு என்ற பெயரில் குறைந்த வாடகையான ரூ. 500க்கும் ரூ. 1500க்கும் கொடுத்துள்ளது. இங்கு ஒரு தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது. அவற்றிற்கெல்லாம் காரணம் வக்பு வாரியங்கள் ஊழல் பேர்வழிகளைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளதும், இதில் ஆளும் கட்சிகளின் தலையீடுகளும்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. டில்லி சிறுபான்மையினர் கமிஷனின் உறுப்பினர் ஒருவர், டில்லியில் நிஸாமுதீன் சாலையில் மிகவும் மதிப்புமிக்க பகுதியில் வக்பு வாரி யத்திற்கு உரிமையான நிலத்தில் ஒரு தனியார் பள்ளிக் கூடத்தை நடத்துகிறார். அதற்கு ரூ.1000 பிச்சைக்காசை வாடகையாக வாரியத்திற்குக் கொடுக்கிறார். இவர்களெல்லாம் வக்பு வாரிய சொத்துக்களை அபகரித்து தனியார் கல்வி நிறுவனங்களை நடத்துகின்றனர். ஆனால் அதிக கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு மட்டுமே அங்கு இடம். வசதியற்ற வறிய முஸ்லிம்களால் அங்கு தரிசிக்கவே முடியாது.
பல இடங்களில் வாரியத்தில் உள்ள வசதி படைத்தவர்களே வாரிய சொத்துக்களை அற்ப காசுக்கு அபகரித்துக் கொள்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் மாநில அரசே வக்பு வாரிய சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது. உதாரணமாக, ஹைதராபாத் ஹை டெக் நகரம் வக்பு சொத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் அரசு ரூ.500 கோடி மதிப்புள்ள 6000 ஏக்கர் வக்பு நிலத்தைக் கைப்பற்றி, 900 ஏக்கர் நிலத்தை என்டிபிசி நிறுவனத் திற்கும், 800 ஏக்கர் நிலத்தை ஹிந்து ஜாஸ் நிறுவனத்திற்கும் ஏக்கருக்கு ரூ.2.25 லட்சம் எனும் அற்ப விலைக்கு வழங்கி யுள்ளது. வேடிக்கை என்னவென்றால், அப்படி ஏழைகளுக்கு பயன்பட வேண்டிய வக்பு சொத்துக்களை அபகரித்துக் கொள்ளை அடிப்பவர்களெல்லாம் இறை பக்தி உள்ள கண்ணிய மானவர்களாக வெளி வேடமிட்டு நடமாடுவதுதான்.
டில்லி மாநில வக்பு போர்டு தலைவரான சவுத்திரி மைதீன் அகமது, இத்தகைய முறைகேடுகளை நியாயப்படுத்துகிறார். அமைச்சரவையில் இடம் கிடைக்காத, 4 முறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் கூறுகிறார். வக்பு வாரிய சொத்துக்கள் ஒரு சிலரால் அப கரிக்கப்பட்டாலும், அதனால் முஸ்லிம்கள் சிலர் தானே பயனடைகின்றனர். அதுமட்டுமல்ல, அவரே தரும் ஒப்புதல் வாக்குமூலம் என்ன தெரியுமா? அவரது தொகுதி முஸ்லிம்கள் அதிக எண்ணிக் கையில் வாழும் பகுதி எனும் அடிப்படையில், சச்சார் குழு அறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் சமுதாயத்தினரின் வளர்ச்சி திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிதி செல வழிக்கப்படாமலேயே திருப்பி யனுப்பப்பட்டு விட்டதை அவரே ஒப்புக்கொள்கிறார். காரணம், அந்நிதியை எப்படி செலவழிப்பது என்று அதிகாரிகளுக்கு ஏன் தனக்கே கூடத் தெரியவில்லை என்று கூறுகிறார். இதிலும் வேடிக்கை என்னவென்றால், டில்லி மாநிலத்தில் முஸ்லிம்கள் முன்னேற்ற திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பகுதி அது தான். அதன் நிலையே இதுவென்றால், அப்படிப்பட்டவர்களின் கையில் தான் வக்பு வாரியத்தின் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமான சொத்துக்கள் பாதுகாப்பாக ஒப்படைக்கப் பட்டுள்ளன. ஆட்டு மந்தைக்கு காவலாக குள்ள நரிகள்தான் உள்ளன.
இத்தகைய வக்பு வாரிய சொத்துக்கள் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன்பட வேண்டும். அதற்கு உரிய முறை யில் வக்பு வாரிய சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். நிலத் திமிங்கலங்களின் கையிலும், ஊழல் பேர்வழிகள் கையிலும் அகப்பட்டு சீரழிந்துவரும் வக்புவாரிய சொத்துக்கள் மீட்கப்படவும், அது சமுதாய நலத்திட்டங்களுக்காகப் பயன்படுத்தப் படவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். இதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒரு முக்கிய கோரிக்கை யாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வழங்கிய கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அரசு கண் விழிக்கத் தயாரில்லை. ஏன்? இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது அரசியல் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்பதனாலா? வக்பு வாரிய சொதுக்கள் மீட்கப்பட வேண்டு மென்பதற்கும், அச்சொத்துக்கள் சமுதாய நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கும், வக்பு வாரியங் களைக் கொள்ளைக்காரர்களின் கைகளிலிருந்து மீட்பதற்கும் முஸ்லிம் மக்கள் குரல் எழுப்ப வேண்டும். அதன் மூலமே இத்தகைய கூட்டுக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த இயலும்.
(‘அவுட்லுக்’ ஆங்கில பத்திரிகையில் சபா நக்வி எழுதிய கட்டுரையைத் தழுவியது)
நன்றி: தீக்கதிர்.