Navigate / search

திருவாரூர் To சென்னை

இதுவரை கம்பன் இரயிலிலை பயன்படுத்தி வந்தோம்.. வரும் மார்ச் ஒன்று முதல் மன்னை(திருவாரூர்) இரயிலை அதிகமாக நன்கு பயன்படுத்தி கொள்ளவும்.. திருவாரூரில் இருந்து 137(Pooled Quota) படுக்கை எண்ணிக்கையும், மன்னை, நீடாமங்கலம் இருந்து 290(General Quota)படுக்கை எண்ணிக்கை கொண்டு உள்ளது. திருவாரூரில் இருந்து இடம் இல்லை என்றால் (210 rs to Chennai), நீடாமங்கலம் இருந்து பதிவு செய்து திருவாரூரில் ( Boarding) செய்து (220 rs to Chennai)கொள்ளலாம்.. மிகவும் போராடி , திருவாரூர் மக்களுக்காக […] Read more

திருவாரூர் மாவட்டத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது 35 பவுன் நகைகள் பறிமுதல்

திருவாரூர் மாவட்டத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட டாக்டரின் மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சங்கிலி பறிப்பு சம்பவங்கள் திருவாரூர் பிடாரிகோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மனைவி உமாமகேஷ்வரி (வயது40). இவர் தனது வீட்டின் முன்பகுதியில் தட்டச்சு பயிற்சி மையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தட்டச்சு செய்ய வந்த 3 பேர், உமாமகேஷ்வரியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் […] Read more

வடகிழக்கு பருவமழையின்போது திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளாகும் 55 இடங்களில் தடுப்பு நடவடிக்கை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது 55 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் என்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை சிறப்பு அலுவலரும், ஐஜியுமான கருணாசாகர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டத்துக்கனெ அரசு மூலம் நியமிக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை சிறப்பு அலுவலரும் ஐஜியுமான கருணாசாகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, […] Read more

பள்ளிகளுக்கு மாணவர்கள் டூவீலரில் வந்தால் பறிமுதல் : திருவாரூர் எஸ்பி எச்சரிக்கை

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு டூவீலரில் வந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்று அவர் அளித்த பேட்டி: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் நன்மைக்காக 8300087700 என்ற கைப்பேசி எண் காவல்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு பொது மக்கள் குறைகளை எந்த நேரமும்  தெரிவிக்கலாம். இந்த தகவல் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் இயங்கும் இரு சக்கர வாகன […] Read more