Navigate / search

Singapore – கிருமி குறித்த அச்சத்தால் மீட்டுக்கொள்ளப்பட்டிருக்கும் தண்ணீர்ப் போத்தல்கள்

குவாங் லீ லியாங் (Guang Li Liang) குடிதண்ணீர் போத்தல்களில் கிருமிகள் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக அவை கடைகளிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் அதனைத் தெரிவித்தது. ஆணையம் மாதிரிகளைச் சோதிக்கும் வழக்கமான நடைமுறையின்போது, குவாங் லீ லியாங் (Guang Li Liang)போத்தல்களில் கிருமிகள் இருப்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறியது. அவை மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யபட்டவை. போத்தல்களில் இருக்கும் கிருமி மண், நீர், மனிதக்கழிவு போன்றவற்றில் இருப்பவை; அவை தண்ணீரில் பல்கிப் பெருகும் […] Read more

சிங்கப்பூர் – திருச்சி அன்றாட நேரடி விமானச் சேவை – வரும் ஞாயிறன்று தொடங்குகிறது IndiGo

சிங்கப்பூர், திருச்சி ஆகிய நகர்களுக்கு இடையே நேரடி விமானச் சேவையை IndiGo விமான நிறுவனம் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளது. அன்றாடம் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு அது சேவை வழங்கும். சிங்கப்பூரிலிருந்து பிற்பகல் 2 மணி அளவில் திருச்சிக்கு Indigo விமானம் புறப்படும். இந்திய நேரப்படி பிற்பகல் 3.55 மணி அளவில் விமானம் அங்கு சென்றடையும். இந்திய நேரப்படி மாலை 6.40 மணி அளவில் திருச்சியிலிருந்து புறப்படும் விமானம், சிங்கப்பூருக்குப் பின்னிரவு 1.45 மணி அளவில் வந்து சேரும். […] Read more

S.K.ஜபருல்லாஹ் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் தன்னார்வ தொண்டு பணியில் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்புடன் பணிபுரிந்தமைக்காக கூத்தாநல்லூர் S.K.ஜபருல்லாஹ் அவர்களுக்கு இன்று 6/8/2016 HONOURABLE MDM HALIMAH YACOB SPEAKER MEMBER OF PARLIAMENT SINGAPORE அவர்களால் விருது வழங்கப்பட்டது. வாழ்த்துக்கள் செய்தி :அப்துல் அலிம்