Navigate / search

அப்பாவி இளைஞர் கைது கண்டித்து SDPIகட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் தொகுதி தலைவர் அகமதுமைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அப்துல்லத்தீப், மாவட்ட அமைப்பாளர் சேக்தாவூது, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சதாம்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விலாயத்உசேன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோவையில் விசாரணை என்ற பெயரில் முஸ்லிம் வாலிபர் ஒருவரை சட்டத்துக்கு புறம்பாக கடத்தி சென்று, சசிக்குமார் கொலை வழக்கில் பொய் வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது.

             கோவையில் அபுதாகீர் என்ற இளைஞரை சட்டத்திற்கு முரணாக துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று கடுமையான சித்ரவதை செய்து பொய்யாக கொலை வழக்கு பதிவு செய்த கோவை மாவட்ட C.B.C.I.D காவல் துறை அதிகாரிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (24-03-2017) இன்று மாலை 5.00மணியளவில் கூத்தாநல்லூரில் லெட்சுமாங்குடி பாலம் அருகில் திருவாரூர் தொகுதி தலைவர் P.M. அஹமது மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூத்தாநல்லூர் நகர தலைவர் D.M.H. அப்துல் ராஜிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். திருவாரூர் மாவட்ட தலைவர் M. அப்துல் லத்தீப் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் N. மர்சூக் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் M. விலாயத் உசேன் மற்றும் திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட செயலாளர் இ.ரா.காளிதாஸ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இறுதியாக கூத்தாநல்லூர் நகர செயலாளர் I. ஜாஹிர் உசேன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்த அநீதிக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கைதாகினர்

47 பேர் கைது

ஆர்ப்பாட்டத்தில் கூத்தாநல்லூர் நகர தலைவர் அப்துல்ராஜித், நகர செயலாளர் ஜாகிர்உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

Leave a comment