Navigate / search

Unity Medical Center ✨இடமாற்ற அறிவிப்பு✨

✨இடமாற்ற அறிவிப்பு✨

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் கிருபையால் நமதூர் மக்களின் முக்கிய தேவையான இரவு நேர மருத்துவமனை (Unity Medical Center) அனைவருடைய துஆவினாலும் மிக சிறப்பாக இயங்கி வருகிறது, நமது யூனிட்டி நிர்வாகம் முன்பே திட்டமிட்ட படி ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவமனையை தொடர்ந்து தரம் உயர்த்துவது என்ற நோக்கத்தின் அடிப்படையில், அதற்க்கு தகுந்த இடம் தேடி கொண்டு இருந்த நிலையில்… அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் கமாலியா தெருவில் அதற்கான இடம் கிடைத்து 01.09.2017 தேதியில் இருந்து இடம் மாற்றப்பட்டுள்ளது.

 

இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இந்த இடத்தில வழக்கம் போல் இரவிலும் கூடுதலாக பகல் நேரங்களிலும் அனைத்து வகை மருத்துவ உபகரணங்கள் வசதியுடன் நமதூர் மக்களுக்கு தரமான மருத்துவம் மற்றும் மருந்துகள் கிடைக்கவும் படிபடியாக வேலைகள் நடந்து வருகிறது,

 

குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு இந்த மருத்துவமனை ஒரு மிக பெரிய தீர்வாக அமைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு நமதூர் மக்களின் முழு ஒத்துழைப்புடன் கடினமாக கே.என்.ஆர். யூனிட்டி சகோதரர்கள் அனைவரும் உழைத்து வருகிறோம், இதற்க்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பும், மிக முக்கியமாக அனைவருடைய துஆவையும் ஏதிர் நோக்கி உள்ளோம்.

 

மேலும் இந்த சேவை தொடங்குவதற்கு முழு நேரமும் தன்னை அர்ப்பணித்து கொண்டு செயலாற்றிய எங்களின் முன்னால் துணை தலைவர் ✨மர்ஹும் ஹிதாயதுல்லாஹ் அவர்களை இந்த இடத்தில் நினைவு கூர்ந்து, எங்களுக்கு இது வரை வீடு கொடுத்து உதவிய ✨வெளக்குடியார் தாஜ் அவர்களும், தற்போது வீடு வழங்கியுள்ள சகோதரர் ✨இ.மா. பைசல் அவர்களுக்கும், மேலும் நாங்கள் வீடு தேடி அழைந்த நாட்களில் எங்களுக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்த ✨நஜ்முதீன் M. C. அவர்களுக்கும், ஊர் நலனில் அக்கறை கொண்டு எங்களுக்கு உதவியாக இருக்க கூடிய அனைத்து ✨சமூக ஆர்வலர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

 

குறிப்பாக ✨கேன்சர்✨ சம்பந்தமான பல விழிப்புணர்வு முகாம் மற்றும் அதன் பரிசோதனைகளையும் இதில் கொண்டு வர இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்து வருகிறோம்.

 

வெள்ளிக்கிழமை✨ 01.09.2017 தேதியில் இருந்து கீழ் கண்ட இடத்தில் இரவு நேர மருத்துவமனை செயல்படும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

 

⚡மாற்றப்பட்ட இடம்⚡

👉🏻93, கமாலியா தெரு
👉🏻அல்லிகேணி மைதானம் அருகில்
👉🏻அவுக்குர் மன்ஜில் எதிர் புறம்

மேலும் தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துகளையும், கீழ் கண்ட எங்களின் எண்களுக்கு வாட்ஸப் மற்றும் போன் செய்து தெரியப்படுத்தவும்.

A.G.M.பைரோஸ் கான்
தலைவர்
00971505675724

T.M. சதாத்
துணை தலைவர்
00971567427122

M.A. முஹம்மது யூசுப்தீன்
செயலாளர்
00971529064651

P.H. நத்தர்ஷா
துணை செயலாளர்
00971507250834

 

என்றும் ஊர் நலனில்….

🤝கே.என்.ஆர்.யூனிட்டி
🇦🇪அமீரகம்

Leave a comment