Navigate / search

Singapore – கிருமி குறித்த அச்சத்தால் மீட்டுக்கொள்ளப்பட்டிருக்கும் தண்ணீர்ப் போத்தல்கள்

குவாங் லீ லியாங் (Guang Li Liang) குடிதண்ணீர் போத்தல்களில் கிருமிகள் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக அவை கடைகளிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் அதனைத் தெரிவித்தது.

ஆணையம் மாதிரிகளைச் சோதிக்கும் வழக்கமான நடைமுறையின்போது, குவாங் லீ லியாங் (Guang Li Liang)போத்தல்களில் கிருமிகள் இருப்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறியது.

அவை மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யபட்டவை.

போத்தல்களில் இருக்கும் கிருமி மண், நீர், மனிதக்கழிவு போன்றவற்றில் இருப்பவை; அவை தண்ணீரில் பல்கிப் பெருகும் சாத்தியம் அதிகம் என்று ஆய்வில் தெரியவந்தது.

கிருமிகள் உள்ள நீரை அருந்தினால் அது தொற்று நோய்களை உண்டாக்க வாய்ப்புள்ளது என்று ஆணையம் தெரிவித்தது.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4, 26, 29 ஆகிய காலாவதியாகும் தேதிகளைக் கொண்ட போத்தல்கள் மீட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாய் ஆணையம் கூறியது. அதன் தொகுதி எண்: 18228 என்று அச்சிடப்பட்டிருக்கும்.

அதை வாங்கியவர்கள் பயன்படுத்தவேண்டாம் என்றும், ஒருவேளை பயன்படுத்தி நோய்வாய்ப்பட்டிருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டது.

https://seithi.mediacorp.sg/mobilet/singapore/ava-recalls-water-bottle/4124738.html

Leave a comment