Navigate / search

புற்று நோய் சர்ச்சை… ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் தயாரிப்புக்குத் தடை!

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதாக இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், அண்மையில் செய்திகள் வெளி வந்தன.

‘ஜான்சன் அண்டு ஜான்சன்’ நிறுவனம் விற்பனை செய்து வரும் குழந்தைகளுக்கான பவுடரில், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய, ‘ஆஸ்பெஸ்டாஸ்’ என்ற கனிம பொருள் கலந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அதன் 2 இந்திய உற்பத்திக்கூடங்களில் குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பை நிறுத்துமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இதுநாள் வரை தங்களது குழந்தைகளுக்கு இந்த பேபி பவுடரைப் பயன்படுத்தி வந்த தாய்மார்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர், சோப்பு, ஆயில் போன்றவை இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் அமோகமாக விற்பனையாகி வரும் நிலையில், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதாக இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், அண்மையில் செய்திகள் வெளி வந்தன.

For More Details Click Below  Source Link

https://www.vikatan.com/news/india/145378-india-regulator-orders-johnson-and-johnson-to-stop-making-baby-powder-using-certain-raw-materials.html

 

Leave a comment