Navigate / search

1-09-2016 ஞாயிற்றுக்கிழமை – த.மு.மு.க கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

கூத்தாநல்லூர் நகர த.மு.மு.க மாணவரனி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம்

சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகையியனை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து கல்வி நிறுவனங்களில் வருகின்ற 30-09-2016 க்கு முன்பாக கொடுக்க வேண்டும் எனவும், அதில் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் பல்வேறு மாறுதல்களை மத்திய அரசு உண்டாக்கி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி குறிப்பாக கல்வி அறிவில் பின் தங்கிய குடும்பங்கள் இந்த நடைமுறையை எவ்வாறு கையாளுவது என அறியாமல் தடுமாறி வருகின்றனர்.
குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் மாணவர்கள் இந்த சலுகையை பெறாத வகையில் எவ்வாறு இதை தடுப்பது என்பதிலேயே மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது என்பதே இப்படிபட்ட மாறுதலுக்கு காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

இவற்றை கடந்து மாணவ, மாணவிகள் இந்த சலுகைகளை பெற்றிடும் வகையில் கூத்தாநல்லூர் நகர த.மு.மு.க மாணவரனி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்து கொடுக்கும வகைகளில் சிறப்பான இலவச முகாம் வருகின்ற 1அன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

c9c3238d-e8d7-483f-8329-6390665d7b47


கல்வி உதவிதொகை தொடர்பான பத்திரங்கள் இலவசமாக டைப் செய்து கொடுக்கப்படும்.

பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் இந்த முகாமை பயன்படுத்தி பயனடைய வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

முகாம்நடைபெறும் இடம்
ஸ்கைவே டிராவல்ஸ்
ரேடியா பார்க்,
பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

ஆன்லைனில் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்:

1) இருப்பிட சான்று (ரேஷன் கார்டு)
2) மாணவ, மாணவியர் புகைப்படம்
3) வங்கி கணக்கு புத்தகம்
4) வருமான சான்று (சுய கையொப்பம்)
5) ஜாதி சான்றிதழ் (சுய கையொப்பம்)
6) பள்ளி, கல்லூரி சரிபார்ப்பு சான்றிதழ் (Institution verification certificate School/college)
அல்லது நேர்மையான சான்றிதழ் (bonafide certificate)
7) முந்தைய ஆண்டு மதிப்பெண் (Mark Sheet)
8) ஆதார் அட்டை (மாணவ, மாணவியர்)
9) கல்வி கண்டண ரசீது
10) மொபைல் நம்பர்.

மேலும் விவரங்களுக்கு
S.A.நூருல் அமீன்,
நகர செயலாளர்,
8489167979
நகர துணை செயலாளர்கள்:
A.முஹம்மது சலீம்,
9629664650
S.M.J யூசுப் கான்,
9944883607
M.சாகுல் ஹமீது,
9942042018
மாணவரணி செயலாளர்
N. சபீருல் ஹசன்
9087065401
துணை செயலாளர்
S.B.முஹம்மது ஜப்ரின் அரபாத்
9597095652

என்றென்றும் சமுதாய சேவையில்…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
கூத்தாநல்லூர் நகரம்.
திருவாரூர் மாவட்டம்.

Leave a comment