KNR UNITY ஒன்று கூடல் நிகழ்ச்சி 2016
கடந்த 09-12-2016 அன்று நடந்த KNR UNITY ஒன்று கூடல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடத்து முடிந்தது, ஜும்மா தொழுகை முடிந்து கலந்துகொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிக்கபட்டது, பெருந்திரளாக நமதூர் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,
நிகழ்ச்சியின் துவக்கமாக செயலாளர் யூசுப் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார், பின்பு ஊரில் இயங்கி வரும் UMC மருத்துவமனையை பற்றி அதன் செயல்பாடுகளையும் பகல் நேர மருத்துவமனையாக மற்ற செய்து வரும் முயற்சியையும் விளக்கமாக கூறினார்.
அதன் தொடர்ச்சியாக காரப்பா முஹம்மது அப்துல்லாஹ் அவர்கள் UMC மருத்துவமனையின் தேவையை பற்றி சிறிதுநேரம் விளக்கினர்.
முதல் நிகழ்ச்சியாக சகோதரர் நாங்குடியார் பைசல் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த MAGIC SHOW நிகழ்ச்சியை மக்கள் கண்டு கழித்தார்கள்,
அடுத்ததாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது,போயிலகட்டை ஷேக் ரியாஸ், ஷமீம் சர்ஃபராஸ், காரப்பா செய்யதுஅபுதாஹிர் ஆகியோர்போட்டியினை ஏற்பாடு செய்து இருந்தனர். யூசுப் பற்றும் சாகுல் விளையாடியவர்களை ஊக்கபடுதியும் தொகுத்தும் வழங்கினார்கள், சகோதரர்கள் மகசூம், அயுப், ஷேக்பரீத் ஆகியோர் விளையாட்டு போட்டிகள் நடத்தினார், அனைவரும் விளையாட்டில் கலந்து கொண்டு உற்சாகமாகவும் மகிழ்சியாகவும் விளையாடி மகிழ்தனர்.
இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது, முன்னதாக மருத்துவமனை சிறப்பாக இயங்க மிகவும் அரும்பாடுபட்ட சகோதரர்கள் ரியாஸ், ஹிதாயத்துல்லாஹ், Dr இம்தியாஸ் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்க வழங்கபட்டது,
நோட்டன் தாகிர் அலி அவர்கள் வழங்க சவுதி அரேபியாவில் உள்ள சகோததர் M.M. ரியாஸ் அஹமது அவர்கள் சார்பாக சகோதரர் பைரோஸ் கான் பெற்றுகொண்டார்.
சகோதரர் சதாத் அவர்கள் வழங்க கூத்தாநல்லூரில் உள்ள சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் சார்பாக சகோதரர் T.S.N. சாகுல் ஹமீது பெற்று கொண்டார்.
யூசுப் அவர்கள் வழங்க கூத்தாநல்லூரில் உள்ள சகோதரர் Dr.N.H. இம்தியாஸ் அஹமத் அவர்கள் சார்பாக சகோதரர் காரப்பாசெய்யது அபூதாஹிர் பெற்று கொண்டார்.
KNRUNITYயின் இணையதளத்தை புதுப்பித்து அதற்காக பொருளாலும் உடல் உழைப்பாலும் பங்களிப்பு செய்த இம்தியாஸ் அவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கபட்டது, அதனைசகோதரர் அரிப் அவர்கள் வழங்க சகோதரர் இம்தியாஸ் அவர்கள் சார்பாக அவர்களின் சகோதரர் சாதிக் பெற்று கொண்டார்.
அதை தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.
இறுதியாக சகோதரர் நிசார் அவர்களின் நன்றியுரையுடன் ஒன்று கூடல் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியின் முழு ஏற்பாட்டையும் சகோதரர் ஷேக் ரியாஸ் செய்து இருந்தார். சகோதரர்கள் சதாத் மற்றும் அஜ்மல் கான் இருவரும் சகோதரர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தது ஒருங்கிணைத்து நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தனர், மதிய உணவு அனைத்தையும் சகோதரர் போயிலகட்டை ஷேக் பரித் அவர்கள் மிக அருமையாக செய்து இருந்தார்கள்.