இரவு நேர மருத்துவ சேவை ஓராண்டு நிறைவு:
இரவு நேர மருத்துவ சேவை ஓராண்டு நிறைவு:

இறைவனின் உதவியால் கூத்தாநல்லூர் கேஎன்ஆர் யூனிட்டியின் சார்பாக இரவு நேரத்தில் ஏற்படும் திடீர் மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட “யூனிட்டி மெடிக்கல் சென்டர்” தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது.
இதனை முன்னிட்டு, இந்த மருத்துவ மையம் உருவாக ஒருவகையில் காரணமாக இருந்த சமிபத்தில் எங்களை விட்டு பிரிந்த சகோதரர் “ஹிதாயத்துல்லாஹ்” அவர்களின் நினைவாக,
இலவச கண் பரிசோதனை முகாம் கேஎன்ஆர் யூனிட்டியின் மெடிக்கல் சென்டரில் நடத்தப்பட்டது.
இதற்கு பெரும் உறுதுனையாக திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையும் , கூத்தாநல்லூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சகோதரர்களும் இணைந்து இந்த முகாம் சிறப்பாக நடைப்பெற ஒத்துழைப்பு அளித்தனர்.
குறிப்பாக SDPI கட்சியின் Abdul Razik, மருத்துவர் Imthiaz Ahamed, மற்றும் பலரும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

இதற்காக ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
இரவு நேரத்தில் மட்டும் நடந்து கொண்டிருக்கும் யூனிட்டி மெடிக்கல் சென்டரின் மருத்து சேவையை, 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையாக உருவாக்க அனைத்து கே என் ஆர் யூனிட்டி செய்து வருகிறது. இறைவனின் உதவியும், கூத்தாநல்லூர் மக்களின் ஆதரவும் இருந்தால் எதுவும் சாத்தியமே.
ஏஜிஎம் பைரோஸ்கான்,
துணை தலைவர்,
கேஎன்ஆர் யூனிட்டி..✍🏻
Comments
Mashallah. Great service.. Please keep the good work going brothers..