கூத்தாநல்லூரில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம்
பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் 12-11-2016 அன்று “பொது சிவில் சட்டம் தேச ஒற்றுமைக்கு எதிரானது”
என்ற தலைப்பில் மத்திய பா.ஜ.க அரசு திணிக்க முயலும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ஃபாயிஜா ஷஃபிக்கா தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் ஷர்மிளா பானு அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் தஸ்லிமா அவர்களும் எழுச்சியுரை ஆற்றினர். 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
NWF சார்பாக கல்வி உதவி தொகை வழங்குதல்
ஏழ்மையில் நிலையில் கல்வி பயில ஆர்வம் உள்ள இஸ்லாமிய பெண்களுக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் கடந்த சில ஆண்டுகளாக கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. நிகழ்ச்சிக்கு வந்த மாநில தலைவர் ஷர்மிளா பானு அவர்களால் ஒரு பெண்மணிக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
தெருமுணை பிரச்சாரத்தில், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. நேஷனல் விமண்ஸ் ஃப்ரண்ட் தமிழ் மாநில தலைவர், K.I.ஷர்மிளா பானு அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார். நேஷனல் விமண்ஸ் ஃப்ரண்ட் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் M.தஸ்லிமா அவர்கள், விமண் இந்தியா மூவ்மெண்ட் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் ஷஃபியா நிஜாமுதீன் அவர்கள், NWF கூத்தாநல்லூர் நகர தலைவர் A.M.ஃபாயிஜா ஷஃபீக்கா அவர்கள் மற்றும் NWF கூத்தாநல்லூர் நகர செயலாளர் A.A.ஹலிமா யாஸ்மின் அவர்களும் உடனிருந்தனர்.