Navigate / search

70 ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சி கூத்தாநல்லூரில் கோலகாலமாக கொண்டாட்டம்

                  இந்திய திருநாடு  பல்வேறு சமயங்கள் ஒன்றிணைத்து வாழும் நாடு, அனைத்து சமுதாய மக்களும்   இந்தியாவின்   சுதந்திரத்திற்க்காக  பங்காற்றி ஓர் அணியில் திரண்டு போராடினார்கள்  அதில் முக்கியமாக  முஸ்லீம் சமுதாயம் மிக அதிகமாக தங்கள் பங்கை  பொருளாகவும் உடலாலும் உயிராலும் தன் தாய் நாட்டிற்காக  பரிசளித்தனர்.

இன்று நாம் 70 ஆம் ஆண்டு  சுதந்திர தினத்தை கொண்டாடும் நாம் நமது சமுதாயத்தினர்களின் பங்களிப்பை அறிந்து கொள்வது ஒவ்வொரு  இந்திய முஸ்லிம்களின் கடமை, இன்று நாம் வாழும்  காலகட்டத்தில் பல வகையிலும் நமது தியாகங்கள் மறைக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் கொச்சைப்படுத்தப்பட்டும்  நமது சமுதாயம் புறக்கணிக்கபட்டு வருகிறது. வரும் காலங்களில் இளைய தலைமுறை மக்கள் வரலாறு அறியாமல் வளர்ந்தால்  இன்றய ஊடகங்களின் சூழ்ச்சியில்  மக்கள் மனதில் பதியப்படும் தவறான செய்திகளை  உண்மைநிலை அறியாமல் அதனை முழுமையாக  நம்பும் நிலைமை ஏற்பட்டு கொண்டு வருகிறது.

     முஸ்லிம்கள் என்றுமே  தாம் பிறந்த மண்ணிற்கு  ஆற்ற வேண்டிய கடமைகளை செய்ய தவறியதே இல்லை, இனி வரும் சமுதாயமும் தங்கள் பங்களிப்பை கட்டாயம் செய்யும், அதற்க்காக நமது வரலாற்றினையும் நமது சுதந்திரத்திற்காக   உழைத்த நமது முஸ்லீம் உம்மத்தினரின்  பங்களிப்பை நாமும் அறிந்து அதை இனம் நிறம் மதம் நம்பர்களிடமும் பகிர்ந்து கொண்டு வாழும் நமது நாட்டில் ஒற்றுமையுடனும் பாதுகாப்புடனும், வலுமையுடனும் வாழும் வழியை அனைவரும் அறிந்து, அதில் வீர நடைபோடுவோம்,

Leave a comment