நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மற்றும் மீனாட்சி மருத்துவமனை தஞ்சாவூர் இணைந்து நடத்திய மாபெரும் இலவச புற்றுநோய் பரிசோதனை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மற்றும் மீனாட்சி மருத்துவமனை தஞ்சாவூர் இணைந்து நடத்திய மாபெரும் இலவச புற்றுநோய் பரிசோதனை மற்றும் உணவு & உடல் கட்டுப்பாட்டு விழிப்புணர்வு முகாம் கூத்தாநல்லூர் நகரில் 21/01/2017 நடைப்பெற்றது.
இரத்தப் பரிசோதனை, மார்பக புற்று நோய் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை (Pap Smear), பையாப்ஸி பரிசோதனை, Ultrasound கருவி மூலம் பரிசோதனை போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வீட்டுத் தோட்டம் அமைத்தல் (Kitchen Gardening), ப்ளாஸ்டிக்கை தவிர்த்தல், உடற்பயிற்சி & யோகா பற்றிய பயிற்சி பட்டறை வகுப்புகள் நடைப்பெற்றது.
பெண் மருத்துவரைக் கொண்டு ஆலோசனை வகுப்பும், புற்றுநோய் சம்மந்தமான ஆவனப்படமும் திரையிடப்பட்டது.
150 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர்.
புற்றுநோய் சம்மந்தமான நோட்டீஸ் பிரச்சாரமும், பாப்புலர் ஃப்ரணட் ஆஃப் இந்தியா வின் யோகா பற்றிய விழிப்புணர்வு புத்தகம், உடற்பயிற்சி சம்மந்தமான விழிப்புணர்வு கையேடு விணியோகமும் நடைப்பெற்றது.