அன்பு சகோதரர்களே: ஆதரவு தாருங்கள்….
ஊரில் தொழில் செய்யும் நமதூர் சகோதரர்களுக்கும் வீட்டில் சிறுசிறு வியாபாரம் செய்யும் நமது சகோதரிகளுக்கும் ஆதரவு தாருங்கள்…. நமதூர் மக்களை நம்பிதொழில் தொடங்கி, ஊரில் தங்கி, தன் குடும்பம் மற்றும் சொந்தங்களுக்கும், ஊருக்கு பாதுகாப்பாகவும் இருக்ககூடிய நபர்களுக்கு வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் தங்களது குடும்பத்தாரிடம் கூறி நமதூர் மக்ககளுக்கு ஆதரவுதர கூறுங்கள். கண்ணுக்கு தெரியாத ஒருவன் ஒரு ரூபாய் குறைவாக தரும் காரணத்தால் பெட்ரோல் செலவுசெய்து சென்று வாங்குவதை விட அந்த ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் நமதுசமுதாய சகோதரன் வாழட்டும் என்ற அடிப்படையில் வர்த்தகம் செய்யுங்கள். நமது சகோதரர்களிடம் அந்த பொருள் அந்த சேவை கிடையாது என்ற பட்சத்தில் நமது மாற்று மத சகோதரர்களிடம் வாங்குவதில் எந்ததவறும் இல்லை…. ஆனால் நமது சகோதரர்களிடம் கிடைக்கும் போது அவர்களை ஊக்குவிப்பது நமது கடமை. இன்ஷா அல்லாஹ்.
உங்களில் வியாபாரம் மற்றும் பொருள்களை மக்களிடம் கொண்டு சேர்க்க www.knrunity.com இணையதளத்தை இலவசமாக பயன்படுத்தாலம்.