Navigate / search

நபிகள் நாயகம் ஒருசமூகத்தலைவராக சமூக நிர்வாக அமைப்பை கட்டமைப்பதில்   பெருமானர் காட்டிய வழிகள்

நபிகள் நாயகம் ஒருசமூகத்தலைவராக

பேரா. முஹம்மது இஸ்மாயில் ஹஸனீ

சமூக நிர்வாக அமைப்பை கட்டமைப்பதில்   பெருமானர் காட்டிய வழிகள்

(21\12\2017 அன்று நடைபெற்ற ஒரு தேசிய கருத்தரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.) 

 

உலகில் தோன்றிய தலைவர்களுள் இறைவனின்திருத்தூதர் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) ஒருபன்முகத்தன்மை கொண்ட ஆளுமை என்பதுமட்டுமின்றி,

உலகில் வராலாறு உள்ள வரை பெருமானாரைதவிர்த்து ஒரு செய்தியும் பதிவுசெய்ய முடியாதுஎன்ற நிலையை, கடந்த 1400 ஆண்டுகள்தன்னகத்தே வைத்திருக்கும் ஒரே ஆளுமைஅவர்கள் மட்டுமே.

பொதுவாக சமயம் சார்ந்த ஆளுமைகள் சமூகம்சார்ந்த அனைத்து துறைகளிலும்கருத்துக்களோடு பயணிப்பதென்பது அரிது,அதிலும் இரண்டு தளங்களிலும் காலம் கடந்தும்தன் கருத்துக்ளை உயிர்போடு வைத்திக்கும்பெருமை நபிகளாரையே சாரும் என்றுஉரைக்கிறார். உலகில் மிகப்பெரும் தாக்கத்தைஏற்பத்திய 100 ஆளுமைகள் என்ற புத்தகத்தைஎழுதி அதில் முஹம்மது (ஸல்) அவர்களைமுதலாவதாக வைத்து அழகு பார்த்த மைக்கேல்ஹார்ட்.

அந்த வகையில் பெருமானார் ஏற்பத்திய சமூககட்டமைப்பை பற்றியும் அது இன்றும்முஸ்லிம்களிடம் ஏற்பத்திக்கொண்டிருக்கும்தாக்கத்தை குறித்தும் இப்பொழுது பார்போம்.

நபிகளாரின் மக்கமாநகர் வாழ்க்கை என்பதுதனக்கு வந்த வேத செய்திகளை வெளிப்படுத்தஒரு சரியான தளத்தை தேடுவதிலும், அதைமக்கள் மன்றத்தில் கொண்டு சேர்ப்பதிலும்,அதன் காரணத்தினால் எழுந்த எதிப்புகளைசமாளிப்பதில் கழிந்தது.

அதற்கு நேர் மாற்றமாக மதினமா நகர் வாழ்க்கைஎன்பது முழுக்க முழுக்க இறைவனின்கட்டளைகளை செயல்படுத்துவதற்கான ஒருகளத்தை ஏற்படுத்தி, அது சார்ந்த ஒரு முன்மாதிரி சமூக கட்டமைக்க பயன்பட்டது.

அகபாவும், நுக்கபாவும்:

இறைவனால் தனக்கு தரப்பட்ட தூது செய்தியைஎப்படியாவது உலகம் முழுக்க கொண்டுசேர்க்கவேண்டும் என்று புறப்பட்ட நபிகளாருக்குமுதல் தடை அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்துஆரம்பமானது.

அதன் தொடராக அருகில் உள்ள தாயிப் சென்றுஅழைப்பு பணியை துவங்க நினைத்த நபி(ஸல்)அவர்களுக்கு வெற்றி கிட்டவில்லை, ஆனாலும்அதன் முயற்சியில் தொய்வில்லாமலும்,தொடர்படியாகவும் செயல்பட்டார்கள்.

குறிப்பாக ஹஜ் உடைய நேரங்களில்வெளியிலிருந்து வரும் கூட்டத்தார்களை,குழுக்களையும் நபிவயவர்கள் சந்திக்கஆரம்பித்தார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தஎடுத்துரைத்தார்கள்.

அப்படி சந்தித்தவர்களில் யஸ்ரிப்யிலிருந்து (இப்பொழுது அதன் பெயர் மதீனத்துன்நபி)ஹஜ்ஜிக்கு வந்திருந்த 6 நபர்களை அடங்குவர்.அவர்களுக்கு குர்ஆனின் வசனங்களைஓதிக்காட்டி இஸ்லாத்தில் பக்கம் அழைத்தார்கள்.

அந்த 6 நபர்கள் திருப்பிச்சென்று அடுத்த ஆண்டு அவர்களோடு சேர்த்து 12 நபர்களாக வந்தனர்.

அவர்களுக்கு நபியவர்கள் இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்துடன் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்திற்கு முதலாவது அகபா உடன்படிக்கை ( பைஅத் அக்பா வூலா) என்று பெயர் ஆகும்.

அதில் இறைவிசுவாசம் பற்றியும்,நற்செய்திகளில் இறைதூதருக்கு வழிபடுவோம் ,திருடமாட்டோம், அநீதமான முறையில் யாரையும் கொலை செய்ய மாட்டோம் என்பது குறித்தும் இருந்தது.

அம்மக்கள் யஸ்ரிப் திருப்பிச்செல்லும் போது முஸ்அப் பின் உமைர் என்ற நபித்தோழரையும் அவர்களுடன் இஸ்லாம் பற்றி கற்பிப்பதற்க அனுப்பிவைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சி நபியவர்கள் மதீனாவில் ஏற்படுத்த இருந்த  சமூக கட்டமைப்பிற்கு எடுத்துவைத்த முதல் அடித்தளமாகும்.

இந்நிகழ்வு நபியவர்கள் இறைதூதராக அறிவிக்கப்பட்ட பின் 12 ஆண்டுகளுக்கு கழித்து நடைபெற்றது.

அதை தொடர்ந்து 13 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 75பேர் கொண்ட ஒரு குழு நபியவர்களை சந்திக்க யஸ்ரிபிலிருந்து வந்தார்கள். அவர்களில் 73ஆண்களும் 2 பெண்களும் அடங்குவர்.

கடந்த ஆண்டை போன்றே அவர்களிடம் நபியவர்கள் உடன்படிக்கை செய்தார்கள். அதற்க்கு இரண்டாவது அகபா உடன்படிக்கை(பைஅத் அகபா ஸானியா) என்று பெயர்.

இன்னொரு முக்கிய விஷயத்தையும் நபியவர்கள் முன்னெடுத்தார்கள் அது அவர்களில் 12நபர்களை நுக்கபாக்களாக (பொறுப்பாளர்களாக) நியமனம்செய்தார்கள்.

அவர்களில் முக்கியமானவர் முஸ்லிம் சமூகத்தால் அக்காலம், இக்காலம் ,இன்னும் எக்காலமும் மறக்க முடியாத ஒரு ஆளுமை அஸ்அத் பின் ஜராரா.

 

எல்லா உடன்படிக்கைகளிலும் பங்குபெற்ற இவர்,நபியவர்கள் மதீனா பயணித்தபொழுது அவர்களை வரவேற்று அவர்களுக்கு முழுமையான பொறுப்பாளராக திகழ்ந்தார்.

நபியவர்கள் மதீனா பயணிப்பதற்கு முன்பே இஸ்லாம் குறித்து அறிந்து அவர்களை உளமார வரவேற்க ஒரு குழுவை அங்கு ஏற்படுத்தியது சமூக  கட்டமைப்பில் முக்கியப்பங்காகும்.

மஸ்ஜித் நிர்ணயம்:

ஹிஜ்ரத் என்ற புனிதப்பயணம் மேற்கொண்டு நபியவர்கள் மதீனா சென்றடைந்ததும் செய்த முதல் பணி ஒரு மஸ்ஜிதை நியமானம் செய்ததாகும்.

மஸ்ஜிதுகள் வெறும் இறைவணக்கம் நிறைவேற்றும் இடம் என்பதை தாண்டி,இஸ்லாமிய சமூகத்தில் மஸ்ஜிதுகளின் பணி மகத்துவமானது.

மொழி அறிவு வளர்ச்சியிலும் களம் அமைத்தவை மஸ்ஜிதுகள் அங்கு குர்ஆன் மற்றும் அரபி மொழியில் வகுப்பு நடைபெற்றது. இன்னும் அரபி மொழியில் மிக உயர்ந்த இலக்கியங்களை கொண்ட கவிதைகளும் அங்கு இயற்றப்பட்டன.

குறிப்பாக ஹஸ்ஸான் பின் ஸாபித் என்ற தோழருக்கு மஸ்ஜிதில் ஒரு மேடை அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்த்து அவர் அதில் அம்ர்ந்து கவிதைகளை இயற்றினார்.

இன்னும் அவை சமூக, பொருளாதார, பாதுகாப்பு,கலாச்சார, பண்பாடு, அரசியல், நிர்வாக விஷயங்களில் முக்கிய பங்காற்றியது.

 

சகோதரத்துவ இணைப்பு:

நபியவர்கள் மதீனாவிற்கு வந்தவுடன் செய்த அடுத்த வேலை மக்காவிலிருந்த வந்தவர்களையும், மதீனாவில் இருப்பவர்களுக்கு இடையில் ஒருவரை ஒருவருக்கு சகோதரராக ஆக்கினார்கள். உடன்பிறந்த சகோதரர்களோடு எப்படி ஒருவர் நடந்து கொள்வாரோ அது போன்றே அவரையும் தன் சகோதரராகவே நடத்த பணித்தார்கள்.

உலக வராலாற்றில் அகதிகளாக அடைக்கலம் தேடி வந்தவர்களோடு எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று முதலாவதாகவும் வழிகாட்டிய பெருமை நபிகளையே சாரும்.

அதன் பின்னரும் எந்த தலைவரும் இப்படி ஒரு நிலையை எடுக்க முன்வரவில்லை.

குறிப்பாக இன்றைய தினம் பல்வேறு இயற்கை சூழல்களாலும், போர்களாலும் அதிகமான மக்கள் அகதிகளாக அடுத்தடுத்த நாடுகளுக்கு இடம்பெயர்ந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் விஷயமாக முடிவெடுக்க முடியாமல் பல்வேறு நாடுகள் குழப்பங்களை சந்திக்கின்றன.

பல நாடுகள் அகதிகளை திருப்பி அனுப்புகின்றனர் அல்லது உள்நாட்டு குழப்பம் ஏறபடும் சூழல் உருவாகிறது.

போதை ஒழிப்பு:

நபிகளார் மக்கா நகரின் ஆரம்பித்த இயக்கம் படைத்த இறைவனை விட்டு விட்டு படைப்பின்ங்களை வழிபடுதல் என்ற மிக மோசமான போதையிலிருந்து மக்களை மிட்க நடவேடிக்கை எடுத்த்து தான்,

அது போன்றே மதீனாவில் அக்கால அரபி மக்களில் பழக்கங்களில் வேருன்றியிருந்து மது அருந்துதல் பெரும் அளவில் வியாபித்து இருந்தது. மதீனா வந்தவுடன் நபியவர்கள் செயத முதல் காரியம் மது மற்றும் போதை தரும் பொருட்களை தடை செய்ததுதான்.

போதனையில் வாழும் சீரழிந்த கலாச்சாரத்தை கொண்ட சமூகம் ஒரு காலமும் தன்னில் மாற்றத்தை நிகழ்த்த முடியாது.

மதுவில் ஊறிப்போயிருந்த அச்சமூகத்தை வெறும் ஒரு வார்த்தையில் அதிலிருந்து தங்களை வாழ்நாள் முழுக்க அதன் வாசனை கூட தொடாத ஒரு சமூகமாக ஆக்கிய பெருமை உலகம் படைக்கப்பட்டதிலிருந்து உலகம் உள்ள வரை நபிகளையே சாரும்.

நிர்வாக பொறுப்பாளர்கள்:

இறைத்தூதை எத்திவைப்பது, இஸ்லாத்தை போதிப்பது என்பதை தாண்டி பல்வேறு தளங்களில் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் நபியவர்களுக்கு மதீனாவில் ஏற்பட்டது.

சில விஷயங்களில் கலந்தாலோசிக்கவும்,பொறுப்புகளை செயல்படுத்தவும், நிர்வாக விஷயங்களை கவனிக்கவும் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர்(ரலி) யையும் தேர்ந்தெடுத்தார்கள்.

அவ்விருவரும் நபியவர்களின் அமைச்சர்கள் போன்று செயலாற்றினார்கள். நபியவர்களுக்கு பின்னால் குலபாக்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தனிச்செயலாளர்:

நபியவர்களின் தனிச்செயலாளராக செயல்பட்டவர் ” ஹுதைபத்துல் யமான் ” என்ற நபித்தோழர் ஆவார்.

நபியவர்களின் இரகசிய காப்பாளர் என்ற பெயர்கொண்டே இவர் அறியப்படுகிறார்.

“நாயவஞ்சகர்கள் யார் யார் என்ற குறிப்பை கூட நபியிடமிருந்து அவர் அறிந்து வைத்திருந்தார்” என்ற தகவலை தருகிறார் உஸ்துல் காபா என்ற நூலின் ஆசிரியர் இப்னு அஸீர்.

பாதுகாப்புத்துறை :

கைஸ் பின் ஸஅத் என்ற நபித்தோழர்,பெருமானாருக்கு முன்னால் எப்பொழுதும் ஒரு காவல் துறை தலைவரின் ஆயத்தைத்தை போன்று தாயார் நிலையில் இருப்பார்.

மெய்காப்பாளர்கள்:

நபியவர்களின் மெய்காப்பாளர்கள் போன்று சஅத் பின் ஜைத், ஜுபைர் , அபூஅய்யூப், பிலால்,சஅத் பின் முஆத் மற்றும் அப்பாஸ் பின் பஷீர் ஆகியோர் பணியாற்றினார்கள்.

எல்லையோர காவல் படை:

இரவு நேரங்களில் ஊரின் பாதுகாப்பிற்க்கும்,எல்லையோர பாதுகாப்பிற்கும் சில நபர்களை நபியவர்கள் நியமித்திருந்தார்கள். அவர்களின் சஅத் பின் அபீவக்காஸ், பதீல், உவைஸ் பின் ஸாபித், மற்றும் ராபிஃவு பின் ஹதீஜ் குறிப்பிடத்தக்கவர்களாவர்கள்.

குற்றவியல் சட்ட நடைமுறையாளர்கள்:

இஸ்லாத்தில் குற்றவியல் சட்ட தண்டனைகள் மிக்கடுமையானவை, அப்படி கடுமையாக இருக்க காரணம் சமூகத்தில் இது போன்ற கொடுமைகள் தொடர் கதையாவதை தடுப்பதற்காக. அவற்றில் திருடினால் கைவெட்டுதல், விபச்சாரம் புரிந்தவருக்கு ஹத் ( கல்லால் அடித்து கொல்லுதல்) கடமை நிறைவேற்றுவது,சாட்டையால் அடிப்பது.

வெளியிலிருந்து பார்பதற்கு இந்த சட்டங்கள் ஏதோ கொடுரமானவையாக தோன்றினாலும்,உண்மையில் மனித இன பாதுகாப்பிற்கு இவை போன்ற ஒரு சட்டம் உலகில் வேறு எங்கும் இயற்றப்படவில்லை.

ஆகையால் தான் இன்றைக்கும் வன்கொடுர கொலைகளும், கற்பழிப்புகளும் நிகழும்போது இச்சட்டத்தை முற்றிலும் மறுப்பவர்களும்,வெறுப்பவர்களும் கூட, இஸ்லாத்தின் சட்டம் நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்த படவேண்டும் என்று விரும்புகின்றனர்.

இது போன்ற குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்றுவதற்கு சில நபர்களை நபியவர்கள் நியமித்திருந்தார்கள் அவர்களில் அலி ,முஹம்மது பின் முஸ்லமா, ஜுபைர், ஆஸிம் மற்றும் பிலால் முக்கியமானவர்கள் ஆவர்.

சிறைச்சாலைகள்:

ஆண்கள், பெண்களுக்கென்று தனிதனி சிறைச்சாலைகள் மதீனாவில்  இருந்தன. அதில் மரண தண்டனை அல்லாத மற்ற கைதிகள், சில நேரங்களில் மரண தண்டனை கைதிகள் தேவை நிமித்தமாக சில நாட்கள் அடைக்கப்பட்டனர்.

தனிச்செயலார்கள்:

நபியவர்களை சந்திப்பதற்கு முன் அனுமதி பெற்று சந்திப்பதற்கு சில நபர்களை நியமிக்கப்பட்டிருந்தார்கள் அவர்களில் அனஸ்,ரிபாஹ், அபூ அன்ஸா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

முத்திரை பெறுப்பாளர்கள் :

நபியவர்கள் ஆரம்பகாலங்களில் உள்ளூரில் இஸ்லாத்தினை எத்திவைத்ததோடு, அடுத்த நாட்டு அரசர்களுக்கும், குழுக்களின் தலைவர்களுக்கும் இஸ்லாத்தை குறித்து கடிதம் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது நபியவர்களுக்கு சொல்லப்பட்டது. அரசர்கள் முத்திரை இடப்படாத கடிதங்களை ஏற்பதில்லை என்று, இக்காரணத்திற்காக ஒரு முத்திரையை நபியவர்கள் தயார் செய்தார்கள் அதில் ” முஹம்மது ரஸுலுல்லாஹ்” என்ற பொறிக்கப்பட்டிருந்தது.

அந்த முத்திரையை பாதுகாக்க இருவரை நியமிக்கப்பட்டனர். 1. ஹன்லலா பின் ரபீஇ 2.ஹாரிஸ் பின் அவ்ப், இவர்களில் ஏதேனும் ஒருவர் வேலையாக வெளியே  சென்றால் மற்றொருவர் அந்த முத்திரையை பாதுகாப்பார்.

வரலாறு நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இம்முத்திரை நபியவர்களுக்கு பின் கலீபாகளால் பாதுகாகப்பட்டு வந்தது. கலீபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் அது அரீஸ் கிணற்றில் விழுந்து விட்டது.

விருந்தினர் வரவேற்பாளர்:

நபியவர்களை சந்திக்க வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரித்து அவர்களுக்கு சந்திப்பிற்கான நெறி முறைகளை பயிற்றுவிக்க சில நபர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் முக்கியமானவர் அபூபக்கர (ரலி) ஆவார்கள்.

விருந்தினர் மாளிகை:

நபியவர்களை சந்திக்க வருபவர்களை தங்குவதற்கென்று தனி இடம் ஒன்று இருந்தது,அது அர்மிளா என்பவருக்கு சொந்தமான வீடாகும். அம்மாளிகையில் விருந்தினர்களை கவனிக்கவும் , உணவு ஏற்பாடு செயவதற்க்கும் பிலால், சவ்பான் என்ற இருவர்  இருந்தனர்.

அம்மாளிகையில் சுமார் 600 நபர்கள் தங்கும் அளவிற்கு பெரியதாக இருந்தது.

சந்தை பொறுப்பாளர்கள்:

குறிப்பாக மதீனாவில் வாழும் மக்கள் அதிமாக விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், பொதுவாக அரபுகளிடம் வாணிபம் செய்தலே அதிகம் காணப்பட்டது. குரைஷிகள் வியாபாரத்தில் பெயர்பெற்று இருந்தனர்.

மதீனாவில் உள்ள சந்தையை கவனிக்கவும், அதில் சட்டங்கள் சரியான முறையில் பேணப்படுகிறாதா என்று கண்காணிக்கவும், அதில் ஏமாற்றுதல்,பதுக்கல் போன்றவை நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களை நபியவர்கள் நியமித்திருந்தார்கள்.

மிக பிரபலமான உமர் (ரலி) அவர்களின் வார்த்தை “ எவர் வியபாரம் தொடர்பான இஸ்லாமிய சட்டவடிவுகளை முழுமையாக அறியவில்லையோ அவர் நம் சந்தையில் வியபாரம் செய்ய தகுதியற்றவராவார்”.

வியபாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக பொறுப்பாளர்களை நியமித்ததோடு இருந்துவிடாம் நபியவர்கள் நேரடியாக சந்தைகளில் சோதனை செய்வார்கள் என்று வரலாற்று ஆசிரியவர்கள் பதிவுசெய்கிறார்கள்.

Leave a comment