Navigate / search

கூத்தாநல்லூர் நகர மின்சார வாரியத்திடம் தமுமுக கோரிக்கை மனு…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

நாள்:17-09-2018

கூத்தாநல்லூர் நகர மின்சார வாரியத்திடம் தமுமுக கோரிக்கை மனு…

கூத்தாநல்லூர் நகர மின்சார வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் பயன்படுத்தியதற்கான மின் அளவீட்டினை அறுபது நாட்களுக்கு ஒரு முறை கணக்கிடுவது வழக்கம்,
(Meter Reading).

ஆனால் தற்போது அறுபது நாள்கள் முடிவடைந்த நிலையிலும் பல்வேறு இடங்களில் Reading குறிக்கபடாமல் உள்ளது.

இதனால் பல்வேறு வீடுகளுக்கு மின்சார கட்டணம் அதிகமாக கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக வழக்கமாக வீடுகளில் சுமார் 90 யூனிட் உபயோகபடுத்துவார்கள், ஒரு சில வீடுகளில் 450 வரை உபயோகபடுத்துவார்கள். ஆனால் தற்போது தாமதமாக Reading எடுக்கப்படுவதால் 90 யூனிட் 110 ஆகவும் 450 யூனிட் 500 க்கு மேலாக போக கூடிய வாய்ப்பு ஏற்பட்டு இரட்டிப்பு மடங்கு மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவற்றை களைந்து மின்சார வாரியம் உடணடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்,

அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதை தவிர்க்க வேண்டியும்,

இரவு நேரங்களில் தவிர்க்க முடியாத காரணத்தால் ஏற்படும் மின்வெட்டை சரிசெய்ய உரிய பணியாட்களை நியமிக்க வலியுறுத்தியும்.

தமுமுக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கை மனுவிற்கு மின்சார வாரிய உதவி பொறியாளர் அவர்கள் கோரிக்கைகள் அனைத்திற்கும் உடனடியாக தீர்வு காணும் வகையில் பதில் அளித்துள்ளார்கள்.

கோரிக்கை மனுவை திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் குத்புதீன்,நகர தலைவர் நூருல் அமீன்,தமுமுக நகர செயலாளர் சாகுல் ஹமீது, மமக நகர செயலாளர் சாதிக்கான், நகர பொருளாளர் செய்யது முபாரக் உள்ளிட்ட துணை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என பெருந்திரளாக கலந்து கொண்டு மனு அளிக்கப்பட்டது.

என்றென்றும் சமுதாய சேவையில்….
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
கூத்தாநல்லூர் நகரம்.
திருவாரூர் மாவட்டம்
நாள்:18-09-2018

Leave a comment