கல்வி உதவிததொகை பெற்றுகொள்ள மாணவர்களுக்கு அறிவிப்பு !!
சிறுபாண்மையினர் மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் . சென்னை மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச் செல்வன் அவர்கள் அறிவிப்பின் படி சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளின் பள்ளி , கல்லுரி மற்றும் மேற்ப்படிப்புக்கான கல்வி உதவிதொகையானது மத்திய அரசால் வழங்கப்படுகிறது .
கல்வி உதவிதொகை
கல்விஉதவிதொகையை மாணவ , மாணவிகள் பெற்றுகொள்ளலாம் மாணவர்கள் கல்வி உதவி தொகையிய பெற்றுகொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . இந்த கல்வி உதவி தொகைகளை பெற்று கொள்ள மற்றும் புதுப்பிக்க இறுதிநாள் ஆகஸ்ட் 31 ஆகும் . சிறுபான்மையினர் மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற்றுகொள்ள உதவும் www.scholarships.gov.in இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் . சிறுபான்மை மாணவர்கள் மத்திய அரசு வழங்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர் .
மத்திய அரசு வழங்கும் மாணவர்களுக்கான கல்வி உதவி தொகையை பெறுவதற்க்கு ஸ்காலர்சிப் தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் . அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பிரிவு வாரியாக கல்வி உதவிதொகை வழங்க தனித்தனி பிரிவுகளை உருவாக்கியுள்ளது .
மாணவர்கள் ஸ்காலர்சிப் போர்டலுக்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பிக்கும் போது தங்கள் சுய விவரங்கள் அத்துடன் இணைப்பு சான்றிதழ்களை எதாவது சமர்பிக்க வேண்டுமெனில் சமர்பித்தது அரசின் சலுகையை மாணவர்கள் உயர்க்கல்வி படிக்கும் அனைவரும் பயன்படுத்தலாம் . இது மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சலுகை இதனை தகுதியுடையோர் பயன்படுத்தலாம் .
மாணவர்கள் பள்ளி, கல்லுரி மற்றும் உயர்க்கல்வி, ஆராய்ச்சி படிப்புகள், மாற்றுதிறனாளி மாணவர்கள், பிற்ப்படுத்தப்பட்டோர் பிரிவுகள் என அரசு பல்வேறு பிரிவுகளை கொண்டுள்ளது . அதன் அறிவிப்புகளுக்கேற்ப மாணவர்கள் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.