நமது குழந்தைகள் குடிக்க தண்ணீர் கிடைக்குமா ???
நமது குழந்தைகள் குடிக்க தண்ணீர் கிடைக்குமா ???
நமதூரில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு ஆரம்பித்து விட்டது….
தண்ணீரின் தன்மையும் மாறிவிட்டது…
பல இடங்களில் உப்பு தண்ணீர் வந்துவிட்டது…

நமது பெண்கள் வீடு கழுவுகிறோம், விசேஷங்கள், தண்ணீர் மோட்டாரை உடனே அணைக்க அலட்சியம், இப்படி பல வகையில் நிலத்தடி தண்ணீரை உறுஞ்சி கண்டப்படி வீண்விரையம் செய்கின்றனர்…

இன்னும் அதிகம் அதிகமா மரங்களை வெட்டுகிறோம், ஒரு மரம் கூட நமது வீட்டில் புதிதாக வளர்ப்பது இல்லை.
நமதூரில் உள்ள குளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூடி கொண்டு வருகிறோம்… இருக்கும் குளங்களை ஆழப் படுத்தி மழை நீர் சேமிப்பதில் ஒரு நாளும் நாம் கவனம் செலுத்தியது இல்லை.

வீட்டிலும் நமது தோட்டத்தில் மழை நீர் சேமிப்பதில் ஒரு நாளும் நாம் கவனம் செலுத்தியது இல்லை.
இப்படி இருக்க… இன்னும் 10 வருடங்களில் நமது ஊரில் குடிக்க மட்டும் இன்றி.. வீட்டிற்கும் குளிக்கவும் தண்ணீர் இன்றி மாற கூடிய சூல்நிலையில் உள்ளதை நாம் ஏனோ உணர்த்துவதே இல்லை.
இவை அனைத்திர்ற்கும் மேலாக நமதூரின் அருகில் உள்ள ONGC கிணறுகள் அதிக படுத்தபட்டு வருகிறது.

இப்பொழுது கூட நமக்கும் நமது குழந்தைகளுக்கும் தண்ணீரை மிச்சப்படுத்தி மழைநீரை சேர்த்து வைக்க எண்ணம் இல்லமால் வாழ்ந்தால். மிக விரைவில் அதற்க்கான விளைவுகளை நாம் கண்கூடாக காணப்போகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை …
ஓஎன்ஜிசிக்கு எதிராக கிராம மக்கள் முற்றுகை போராட்டம்… திருவாரூர் அருகே பரபரப்பு!
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/people-protested-against-ongc-at-kadambangudi-tiruvarur-district-311413.html