உணவில் சர்க்கரை கூடினால் நீரிழிவு, கேன்சருக்கு வழிவகுக்கக்கூடும்
உணவில் சர்க்கரை கூடினால் நீரிழிவு, கேன்சருக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அதற்கு மாற்றாக செய்யவேண்டியது என்னவென்றும் உலக சுகாதார அமைப்பு ஒரு சிறு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நம் தினசரி உணவு முறைகளில் சர்க்கரை கூடினால் நீரிழிவு, மற்றும் புற்று நோய் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதற்கு மாற்றாக நாம் செய்யவேண்டியது என்ன:
‘நம் உணவில் ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்?’ – என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ எச் ஓ) ஒரு நாளைக்கு அதிகபட்சம் 12 தேக்கரண்டி சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது.
உணவில் சர்க்கரை கூடுவது எடை அதிகரிப்புக்கு காரணமாகும், இந்த சர்க்கரை இப்பொழுது நீரிழிவு நோயிலிருந்து சில வகையான கேன்சர்வரை அதிகமான நோய் ஆபத்துகளுடன் இணைந்துள்ளது.
பழங்களிலும் பாலிலும் சேர்ந்துள்ள சர்க்கரையை டாக்டர்கள் சேர்க்கப்பட்ட சர்க்கரையாகக் கருதுவதில்லை. பழங்களில் இயற்கையாகவே உள்ள சர்க்கரையுடன் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பிராணவாயுவை அதிகரிக்கும் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.


மற்ற உணவு வகைகளைவிட பழங்களிலும் காய்கறிகளிலும் அதிக அளவில் சத்துக்கள் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 5 பழங்களாவது காய்கறிகளாவது ஒருவர் எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் பானங்களிலும் பெரிய அளவில் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவது நம் கண்களுக்குத் தெரியாதது
சர்க்கரையை சிறியவர்களும் பெரியவர்களும் நேரடியாக அல்லாமல் உணவுப் பொருட்களின் வழியாக அதிகபட்சம் 12 தேக்கரண்டிகள் எடுத்துக்கொள்ளலாம்.
சமைக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களிலும் பானங்களிலும் மற்றும் தேன், பழச்சாறு, பாட்டில்களில் வரும் இனிப்பு திரவம் ஆகியவற்றில் இயற்கையாக சர்க்கரை உள்ளன.
திட-திரவ உணவுகள்
இதற்கிடையில், திட உணவை விட திரவங்களில்தான் அதிக கலோரிகள் இருப்பதாகவும் அதுவே எடைகூடுவதற்கு வழிவகுப்பதாவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
நம் உடலானது திட உணவுகளில் உள்ள சர்க்கரை அளவை சிதைத்துக் குறைக்கிறது. ஆனால் இதே பணி திரவ உணவுகளைப் பொறுத்தவரை சற்று தாமதமாகத்தான் நடைபெறுகிறது. அதனால்தான் ஊட்டச்சத்துக் குறைவன கலோரிகள் கொண்ட இனிப்பு வகை பானங்களை நாம் விரைவுகதியில் உட்கொண்டாலும் திட உணவு போல் வயிறு நிரம்பியதாக நாம் உணர்வதில்லை.
“குழந்தை பருவத்தில் தொடங்கும் அதிக எடை மற்றும் உடல் பருமன் – டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல தொற்றுநோயற்ற நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்கிறார்கள் மருத்துவர்கள்.